Advertisement

கடையை, 'படிக்கும்' செயலி!

Share

இன்றைய சூழலில், கடைகளில், முக கவசம். கைகளுக்கு சானிடைசர். சமூக இடைவெளி. இவற்றை நினைவூட்டவே பல பணியாளர்களை நிறுத்த வேண்டியுள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்கேன்டிட் (Scandit) வெளியிட்டுள்ள ஒரு மென்பொருள் மேடை, சிறிய கடைக்காரர்களும், தங்கள் கடைக்கென்று ஒரு மொபைல் செயலியை உருவாக்கிக்கொள்ள உதவுகிறது.

ஸ்கேன்டிட்டின் மென்பொருளை வைத்து, தங்கள் கடையிலுள்ள பொருட்களை ஒரு முறை சிறப்பு கேமரா ஸ்கேனரால் வருடி, பட்டிய லிட்டுக் கொண்டால் போதும். வருகிற வாடிக்கையாளர்கள், அந்த கடையின் செயலியை தரவிறக்கம் செய்து, உடனே அலமாரிகளில் தங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்து தள்ளு வண்டியில் வைத்து படமெடுத்தால் போதும்.

ஸ்கேன்டிட் செயலியே, பில் போட்டு காட்டுவதோடு, வாடிக்கையாளர், மொபைல் பேமென்ட் செய்தவுடன், ரசீதையும் உடனே அனுப்பிவிடுகிறது.இதனால், கொரோனாவுக்கு பிந்தைய விற்பனைகளுக்காக, கடைக்காரர்கள் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டியதில்லை. தவிர, வாடிக்கையாளரும் நேராக கடைக்குள் போய்விட்டு, வெளியே வரலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement