Advertisement

சமூக இடைவெளிக்கு எளிய மேஜை

Share

அலுவலகங்களில் பாதிப் பேரை மட்டும் பணிக்கு வரச்சொல்லும் போக்கு உலகெங்கும் தற்போது உள்ளது.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவே இப்படி ஒரு நடவடிக்கை.மெக்சிகோவை சேர்ந்த ஒரு வடிவமைப்பு நிறுவனம். எடை குறைவான, எளிதில் மடக்கி வைத்துவிடக்கூடிய ஒரு நவீன மேசையை உருவாக்கியுள்ளது.

நோமாடா (NOMADA) என்ற இந்த மேஜையை, எவரும் எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு வெளியே நிழல் உள்ள பகுதியில் நிறுத்தி, வேலையை தொடரலாம்.

வேலை முடிந்ததும் அவரே அலுவலகத்திற்குள் சிறிய இடத்தில் மேஜையை மடக்கி வைத்துவிட்டு செல்லலாம்.

இந்த மேஜையை செய்ய, பழைய மரச் சாமான்களின் பலகைகளே பயன்படுத்தப்பட்டது என்பதும், சமூக இடைவெளியுடன் அலுவலக வளாகத்திற்குள்ளேயே வேலையை செய்ய முடியும் என்பதும் நோமாடா மேஜைக்கு மெக்சிகோவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement