Advertisement

தெருவோர நாய் பூனைகளை காப்பாற்றும்‛வேகி டேல்ஸ்'.

Share



ஊரடங்கு மக்களை மட்டுமல்ல மனிதநேயத்தைக் கூட ஆட்டிப்பார்த்து வருகிறது.

வீட்டிற்குள் முடங்கிப் போன மனிதர்களால் அதிகம் பாதிக்கப்பட்டது தெருவில் திரியும் நாய்களும் பூனைகளும்தான்.

சாப்பிட உணவு கிடைக்காமல் மிகவும் திண்டாடிப்போனது.இதைப் பார்த்த சில நல்ல உள்ளங்கள் அவைகளுக்கு சாப்பாடு போடத்துவங்கினர்.சாப்பாடு போடும் போது நாய்கள் பல பலவித காரணங்களால் காயம்பட்டு இருப்பதைப் பார்த்து அவைகளை குணப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினர்.

இவர்களது இந்த சேவையைப் பார்த்து மேலும் சிலரும் சேர்ந்து கொள்ள ‛வேகி டேல்ஸ்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.சென்னையில் ஏற்ப்படுத்தப்பட்டுள் இந்த அமைப்பினர் இப்போது தங்களுக்குள் ஏரியாக்களை பிரித்துக் கொண்டு அங்குள்ள நாய்கள் பூனைகளுக்கு உணவளித்து வருகின்றனர் பாதிக்கப்பட்ட வளர்ப்பு பிராணிகளை குணப்படுத்தியும் வருகின்றனர்.

வேகி டேல்ஸ் அமைப்பு தெருவோர நாய்கள் மற்றும் பூனைகளை தத்து கொடுப்பதிலும் அவைகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.வருங்காலத்தில் இவைகளுக்கான காப்பகம் உருவாக்கும் முயற்சியிலும் ஹரி, சதீஷ், ஜனனி, டாக்டர்.விநோதினி, டாக்டர்.ஹரிஷ்குமார், குரு, கண்ணன், ராஜேஷ், அபிலாஷ், நாகநாதன், சதீஷ், சுவீதா, பிரியா, சங்கீதா ஆகியோர் இறங்கியுள்ளனர் அவர்களை வாழ்த்துவோம்.

பசியால் வாடும் பிராணிகளையோ,காயம்பட்ட பிராணிகளையோ பார்த்தால் அவைகளைப் பற்றி 9047439313,
9600187118 எண்களுக்கு தகவல் தந்தால் அவர்கள் பார்த்துக் கொள்வர்.

-எல்.முருகராஜ்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement