Advertisement

பஞ்சாயத்தில் ஒரு பஞ்சாயத்து

Share

முழு ஊரடங்கு நாள் என்பதால், வீட்டு மாடியில், சாலையை வேடிக்கை பார்த்தவாறு இருவரும், அரட்டையை துவக்கினர்.''மித்து, ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிச்சதும், முதல் வாரம் நல்ல 'ரெஸ்பான்ஸ்'. ஆனா, இந்த வாரம், சொதப்பிட்டாங்க. நெறைய இடத்தில கறிக்கடை திறந்திருக்குது. மக்கள் சகஜமா வந்து போறாங்க,''

''ஆமாங்க, எல்லாருமே கொஞ்சம் 'கேர்லெஸ்ஸா' இருக்காங்க, வர்ற வாரம் எப்படியோ?''''சரிவிடு அதை அப்ப பாத்துக்கலாம். தினகரன் கட்சியில, கோஷ்டி பூசல் தலைவிரிச்சாடுதாம், தெரியுமா?'' கேட்டாள்.

''இருக்கிறதே, கொஞ்சம் பேர். அதிலும், கோஷ்டியா?'' சிரித்தாள் மித்ரா.''ரெண்டு மாஜிக்களுக்கு மத்தியில், கோஷ்டி பூசல் உச்சகட்டத்தில் இருக்காம். கட்சியின் எந்த விழாவா இருந்தாலும், இவங்க பண்ற பஞ்சாயத்து தாங்க முடியலைன்னு, சொந்த கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க,''''கொரோனாவை சொல்லி பலரும் வசூல் வேட்டை பின்னறாங்க,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா''அடக்கொடுமையே, யாருங்க்கா, அது?''

''செட்டிபாளையம் பகுதியில, ஒரு கும்பல், கொரோனா நிவாரணம் வாங்கித்தர்றோம்னு சொல்லி, நெறைய பேர்கிட்ட, ஆதார், ரேஷன், வங்கி பாஸ் புக் ஜெராக்ஸோட, 300 ரூபாயும் வசூல் பண்ணிட்டாங்களாம்,''''ஆனா, யாருக்கும் 2 ஆயிரம் வரவே இல்லையாம். இத வெளியே சொன்னா, நமக்குத்தான் அசிங்கம்னு, இருந்திட்டாங்ளாம்,''''இப்டி நெறைய பேர் மனசாட்சி இல்லாம, நடுத்தர குடும்பத்தை குறி வச்சு, பணத்தை லவட்டிடறாங்க,'' சொன்ன சித்ரா, ''அதிகாரிங்களுக்கு கொரோனா பயம் வந்திடுச்சு'' என, மித்ராவின் அம்மா கொடுத்த காபியை குடித்தாவறே பேசினாள்.''ஏன், அவங்க கொரோனா தடுப்பு பணி செய்றாங்களாக்கும்,''''அது இல்லடி, ஊரடங்கை, மறந்துட்டு, மினிஸ்டர் கூட்டம் சேர்த்தி, அடிக்கடி அடிக்கல் நாட்டு விழா நடத்தறார்.

வேற வழியில்லாம கலெக்டரும், அதிகாரிகளும் ஆஜராக வேண்டியிருக்கு. இப்படியே, கூட்டமா போயி, வீதிவீதியா விழா நடத்தினா, சென்னையை, திருப்பூர் பின்னுக்கு தள்ளிடும்னு, பயப்படறாங்க,''''அது கரெக்ட்தானுங்க்கா. இதே மாதிரி, கலெக்டரோட, பி.ஏ., பதவிக்கு வர்றதுக்கு பலரும் தயங்குறாங்களாம்,''''ஏன்... நல்ல போஸ்டிங்தானே,''''அந்த போஸ்டிங்க்கு வேற யாரும் வராததால், ஒருத்தர், ஒரு வருஷமா 'இன்சார்ஜில்' பாத்தாரு. இப்பதா, 'தாட்கோ' அதிகாரிய, மாத்தினாங்க. அவரு லீவில் போனதால, பழைய அதிகாரியை மீண்டும் பி.ஏ.,வாக்கிட்டாங்களாம்,''

''மித்து, புதுசா வந்த அதிகாரியோட உத்தரவால் போலீஸ்காரங்க சந்தோஷப்படறாங்க,'' பேச்சு, போலீஸ் பக்கம் திரும்பியது.''சிட்டிக்கு பொறுப்பான அதிகாரி, வந்தவுடன், போலீஸ்காரங்க 'பர்த்டே, வெட்டிங் டே'க்கு லீவு குடுத்துடுங்க. ரிலாக்ஸா பேமிலியோட இருக்கட்டும்னு ஆர்டர் போட்டுட்டார். இதைகேட்டு, எல்லாரும் ேஹப்பியாயிட்டாங்களாம்,''''ரொம்ப சரிங்க்கா,''

''ஆனா, சில ஆபீஸர்களை டிரான்ஸ்பர் செய்யாததால், பழைய ஸ்டேஷனிலேயே 'குப்பை' கொட்டறாங்க,'''' என்ன காரணங்களாம்,''''சிட்டியில, 'நார்த் ரேஞ்சில்' மாத்திட்டு, 'சவுத் ரேஞ்ச்'ஐ, கண்டுக்காம விட்டுட்டாங்க. அவங்களும், 'ஜோரா'பாக்கறாங்க,''''ஒருவேள இனிதான் மாத்துவாரோ என்னவோ?'' என்ற சித்ரா, ''ஆளும்கட்சிகாரரோட ஓட்டலில் சூதாட்டம் சூப்பரா நடக்குதாம்,''''அது எங்கீங்க?''

''ரெண்டு நாளைக்கு முன்னாடி, அவிநாசி ரோட்ல உள்ள அந்த ஓட்டலில் புகுந்து ரெய்டு பண்ணி, சீட்டு ஆடிவனங்களை புடிச்சிருக்காங்க. என்ன ஏதுன்னு விசாரிச்சா, ஒழுங்கா போயிட்டிருந்த மாமூல் போகலைன்னு, ரெய்டு விட்டு மிரட்டினாங்களாம்,''''மே பி... சான்ஸ் இருக்குது,'' என்ற மித்ரா, ''வெண்ணெய்க்கு பேர் போன ஊரில், ஒரு குட்டி அதிகாரி வசூல் வேட்டை கொளுத்தி எடுக்கிறாராம்,''''அப்ப, 'வெண்ெணய்' வைத்து காரியத்தை முடிச்சுக்கிறாங்கன்னு,' சொல்லுடி,'''அக்கா, போன வாரம் லாரி ஒன்னு ஏக்ஸிடென்ட் ஆயிடுச்சு. ஆனா, எப்.ஐ.ஆர்,. போடறதுக்கு, 10 ஆயிரம் கேட்டு பஞ்சாயத்து செஞ்சாராம்.

அவருக்கு, ஸ்டேஷன் ஆபீசரும் பயங்கர சப்போர்ட்டாம்,'' சொன்ன மித்ரா, ''அம்மா... கிரைண்டர் ரிப்பேர் பண்ண முருகேசன் வந்தாரா?'' சமையலறைக்கு கேட்கும்படி சத்தம் போட்டாள்.'அவரு எங்க உடனே வர்றாரு, பணத்தை மொதல்ல குடுத்தாதான், வேலய செய்வேன்னு சொல்றாருடி,' பதில் கொடுத்தார் அவளது அம்மா.''ஓகே, நீங்க பாத்துக்கோங்க,''''ஏன், மித்து, லிங்கேஸ்வரர் குடிகொண்ட ஊரில் 'சாந்த'மான அதிகாரி, மண் மாபியாகிட்ட, கட்டப்பஞ்சாயத்து பேசி, வசூலை வாரி குவிக்கிறாராம். டெய்லி, சாயந்திரம், ஆறு மணிக்கு மேலதான், இந்த 'டீல்' நடக்குதாம்,''

''அவருக்கு உடந்தையாக, வாகன சாரதி ஒருத்தர் பக்கபலமா இருக்கார்,'' என, சித்ரா சொல்லும் போதே, மொபைல் போன் 'மாரியப்பன் அங்கிள்' என்று ஸ்டிபிளேயில் ஒலித்தது.''அதே ஆபீசில, இன்னொருத்தர் புரோக்கர் மாதிரி நடமாடிட்டு, அதிகாரிக்கும், 'பால'மா இருந்து பணத்தை வசூல் பண்ணி கொட்றாராம். இத்தனைக்கு, அந்த ஆபீசில் இருக்கிற, 'தமிழ்' மேல் பற்று கொண்ட இன்னொரு அதிகாரியும் ஓவரா பண்றாராம்,''

''ஏன், அவரு என்ன செய்கிறார்?''''அக்கா, வயசானவங்க வந்தா மதிக்கறதில்லையாம். யாருக்காச்சும் ஒடம்பு சரியில்லைனா கூட, நேரில் கூட்டிட்டு வந்தாதான் 'சைன்' பண்ணுவேன் சொல்றாராம். இவருக்கும், பெரிய அதிகாரிக்கும் எப்ப பாத்தாலும் ஓயாத சண்டை ஓடுதாம்,''''இத்தனை நடந்தும் கலெக்டர் கண்டுக்கவே இல்லைங்கிறது பெரிய குறை. இவங்க பண்ற 'பஞ்சாயத்து' வேலைக்கு ஒரு பஞ்சாயத்து செஞ்சார்னா பரவாயில்லடி,''மித்ராவின் அம்மா, 'லஞ்ச் ரெடி' சாப்பிட வாங்க,' சவுண்ட் கொடுக்க, இருவரும் சென்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement