Advertisement

பிளாஸ்டிக் கோளத்திற்குள் யோகாசனம்!

Share

சமூக இடைவெளியுடன் உடற்பயிற்சி செய்ய முடியாது என்பதால், உலகெங்கும் பல உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டுவிட்டன. இந்த நிலையில், கனடாவின் டொரன்டோ நகரில், யோகாசனம் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு புதிய முறையை உருவாக்கியிருக்கிறது, எலமென்ட்ஸ் யோகா ஸ்டுடியோ.இதன் திறந்த வெளிக்கூடத்தில், கண்ணாடி பிளாஸ்டிக்கால் ஆன அரைக்கோளங்களுக்குள் யோகா பயிலலாம்.

7 அடி உயரமும், 12 அடி அகலமும் கொண்ட பிளாஸ்டிக் கோளத்திற்குள், 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். இதற்குள்ளிருந்து பார்த்தால், வெளியே பயிற்சியாளர் யோகா செய்து காட்டுவது தெரியும்.

பயிற்சிக்கு முன்னும், பின்னும் பிளாஸ்டிக் கோளத்தை சானிடைசர் கொண்டு துாய்மைப்படுத்துகிறார்கள். கேட்கவே வேண்டாம், எலமென்ட்ஸ் யோகா ஸ்டுடியோவுக்கு யோகாசன பிரியர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த யோசனையை பிற உடற்பயிற்சிக் கூடங்களும் காப்பியடிக்கத் துவங்கிவிட்டனர்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement