Advertisement

வவ்வால்களின் வைரஸ் எதிர்ப்புத் திறன்

Share

வவ்வால்களின் நோய் எதிர்ப்புத் திறனை தீவிரமாக ஆராய்ந்தால், 'கோவிட் - 19' வைரசை தடுக்கும் மருந்தை கண்டுபிடிக்கலாம் என, மருத்துவ உலகில் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.

உங்களுக்கே தெரிந்திருக்கும். மனிதர்களை பாதிக்கும், 'எபோலா, ரேபிஸ்' போன்ற கொடூர வைரஸ்களையும், ஏன் கோவிட் - 19 வைரசையும் எந்த பாதிப்பும் இல்லாமல் வவ்வால்கள் வெற்றிகரமாக சுமந்து திரிகின்றன.

மனிதர்களின் உடலில் இந்த வைரஸ்கள் தொற்றியதும், அவற்றை எதிர்த்து வெல்ல, உடல் நடத்தும் போராட்டத்தின் விளைவு தான் காய்ச்சல், உடல் அங்கங்கள் பாதிப்படைதல் போன்றவை.

ஆனால், வவ்வால்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு, இந்த வைரஸ்களை வேறு விதமாக எதிர்கொண்டு வெல்கிறது. எனவே, வவ்வால்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பணுக்களை ஆராய்வதன் மூலம், கோவிட் - 19 உட்பட பல வைரஸ்களுக்கு தடுப்பூசியை உருவாக்க முடியும் என, 'செல் மெட்டபாலிசம்' இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

    வௌவால்களால் மனிதனுக்கு தாவ மட்டும்தான் செய்யும் . வவ்வால்களால் மனிதனிடமிருந்து உறிஞ்சி எடுக்கவோ அல்லது திரும்ப எடுத்துக்கொள்ளவோ முடியாது . அதனால்தான் மனிதன் உசாராக இருக்க வேண்டும் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement