Advertisement

மூளையை பாதிக்குமா கொரோனா

Share

அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், மனித மூளை மீது, 'கோவிட் - -19' வைரஸ் தாக்குதல் நடத்துமா என்று ஆராய்ந்து வருகின்றனர்.

விலங்குகளின் மூளையை வைத்து ஆராய்வதற்கு பதில், மனித ஸ்டெம் செல்களை வளர்த்து, அதிலிருந்து மூளை செல்களை உருவாக்கி, பிறகு அதன் மீது கொரோனா வைரசை தொற்றச் செய்து, இந்த ஆய்வை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ஆரம்ப கட்ட ஆய்வுகளின்படி, கொரோனா வைரசால், மனித மூளையிலுள்ள நியூரான்களுக்கிடையே தொற்றி, பல்கிப் பெருகி வளர முடியும் என்று யேல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.நுரையீரலை மட்டுமல்ல, மனித உடலின் பாகங்களின் மீது கொரோனா பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதே அண்மையில் தான் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியாகவே, யேல் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் மனித மூளை மீது கோவிட் - 19ன் தாக்கத்தை ஆராய்ந்து வருகின்றனர்.ஆனால், கொரோனா தொற்றிய எல்லாருக்கும் மூளையில் தாக்கம் ஏற்படும் என்று அச்சப்படவேண்டியதில்லை என்றும், யேல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

    மீண்டுமீண்டும் கூறுகிறேன் கொரோனா என்பது நிமோனியாவின் கொடூரமான தாக்குதலேதான் நுரைஈரல்களிலே கபம் கட்டிண்டாள் வருது நிமோனியா அதே கபம் நுரைஈரல்களிலே பிரோசென் ஆவதால் (உறைஞ்சுபோவதால் ) வருவதுதான் கொரோனா கபம் குறைவதால் நேரும் அபாயம் இதயத்தை அமுக்குவதால் மூச்சுத்திணறல் வ றுது மூச்சும் , நின்றுபோறது . நிமோனியாவின் அறிகுறி வேறாக இருக்கும் ஆனால் இது முற்றிலும் வைரஸ் தொற்றினால் வருது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement