Advertisement

'அன்னச் சத்திரமா நடத்துது அரசு?'

Share

'கொரோனா' தொற்று பரவல் காரணமாக, கரூர், ராயனுார் நேதாஜி நகர், முதல் தெருவிற்கு, 'சீல்' வைக்கப்பட்டது. அப்பகுதி மக்கள், வீடுகளில் முடங்கினர். அவர்களுக்கு, அரசு சார்பில், அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்படவில்லை.

சமீபத்தில், ராயனுார் வந்த, கலெக்டர் அன்பழகனிடம், அக்கம் பக்கத்தினர் முறையிட்டனர். 'டென்ஷன்' அடைந்த அவர், 'ஊரெல்லாம் சுத்திட்டு, நோயோட வருவாங்க... அவங்க வீட்டுக்கே போயி, தட்டுல சோறு போட முடியுமா... அரசு என்ன அன்னச் சத்திரமா நடத்துது...' என்றார்.

அவரது பேச்சால் அதிர்ச்சி அடைந்த, முதியவர் ஒருவர், 'ஓட்டுக்கு பணம் வாங்கினோம்... இலவச பொருட்களை முண்டியடிச்சு வாங்கினோம்... அதனால தான், ஆட்சியாளர்களுக்கு, மக்களை பார்த்தா, பிச்சைக்காரங்களை போல தெரியுது...' என்றதும், சுற்றியிருந்தோர் தலை கவிழ்ந்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    அரசு இலவச ரேஷன் அரிசி தருகிறதே அதற்க்கு பெயர் என்ன? அந்த அதிகாரி விளக்குவாரா?

  • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

    கலெக்டர் கூறியதை தப்பாக போடாதீங்க , அவருக்கும் பிரஷர் இருக்கும் , முன்பெல்லாம் ஒன்று இரண்டு பகுதிகளை தான் முடக்குவார்கள் இன்று முடக்கினால் இலவசம் என்று மக்களை என்ன வைத்து அலையும் மக்களுக்கு இன்னமும் அலைஞ்சு திரிங்கடா என்று கூறுவது போல இருக்கு உங்களின் தாத்தா வசனம் , கலெக்டரை பாராட்டுகிறேன்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஒரு பகுதிக்கு சீல் வைத்துவிட்டதால் அப்பகுதி மக்கள் தங்கள் தேவைகளுக்கு அரசை நம்பும் நிலை உள்ளது இந்நிலையில் அவர்களை இழிவுபடுத்திப் பேசிய கலெக்டர் கொஞ்சம் மனிதத் தன்மையைக் கற்றுக்கொள்ள வேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement