Advertisement

'கட்சிக்கு, 'காரியம்' நடத்த வேண்டியது தான்!'

Share

நாகை அருகே, செருதுார் உயர்நிலைப் பள்ளியில், 1.61 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையை, கைத்தறித் துறை அமைச்சர், ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தார்.

பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'சிறையில் இருந்து, சசிகலா வந்தவுடன், கட்சி, ஆட்சி ஆகிய இரண்டையும், அவரிடம் ஒப்படைப்பது குறித்து, தலைமை தான் முடிவு செய்யும். நான், ஒரு மாவட்டச் செயலர் தான். எனவே இது குறித்து, நான் எதுவும் கூற முடியாது' என்றார்.

இளம் நிருபர் ஒருவர், 'மன்னார்குடி கும்பலுக்கு, மக்களிடம் செல்வாக்கு இல்லை என்பது, தினகரனின் நிலையை பார்த்தாலே தெரியும்... அந்த கும்பல் புகுந்தால், கட்சிக்கு, 'காரியம்' நடத்த வேண்டியது தான்...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • natarajan s - chennai,இந்தியா

    இவர்கள் எல்லாம் திருமதி சசிகலா அவர்களுக்கு பயந்துதான் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். என்ன இருந்தாலும் விசுவாசம் விடாது.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    பார்க்கலாம் சின்னம்மா வந்ததும் யார் முதலில் காலில் விழப்போகிறார்களென்று கூவத்தூர் நாடகத்திலும், வாக்கெடுப்பிலும் அள்ளிக்கொடுத்தபோது வாங்கித் தின்றவர்கள் அல்லவா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement