Advertisement

வீட்டில் உருவாக்கும் கவசம் பாதுகாக்குமா?

Share

மருத்துவ உலகில் பயன்படுத்தப்படும் மூச்சுக் கவசங்களுக்கு, காற்று வழியே பரவும் கிருமிகளைத் தடுக்கும் திறன் உள்ளதா என்பது பற்றி பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் வீட்டிலிருக்கும் துணிகளை வைத்து தயாரிக்கப்படும் முக கவசங்களுக்கு, கிருமி தடுப்புத் திறன் உள்ளதா என்பதைப் பற்றி அதிக ஆய்வுகள் நடத்தப்படவில்லை. நடத்திவிடுவோம் என்று கிளம்பினார், அமெரிக்காவிலுள்ள புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக் கழகத்தை சேர்ந்த சித்தார்த் வர்மா.ஆய்வகத்தில், ஒரு பொம்மையின் வாய் பகுதியில் குழாய் வைத்து. செயற்கையாக தும்மல் போல நீர்த்திவலைகளை வெளியேறும்படி செய்து. அதற்கு மேலே இரண்டு அடுக்கு துணிகளை வைத்து தடுப்பு போலச் செய்தனர் சித்தார்த்தின் ஆராய்ச்சிக் குழுவினர்.

பீறிட்டு வெளிவரும் நீர்த் திவலைகள் படப்பிடிப்புக் கருவிகளுக்குத் தெரிவதற்கு வண்ண லேசர் ஒளிக் கதிரை பாய்ச்சினர்.மருத்துவர்கள் பயன்படுத்தும் கவசத்திலிருந்து வெளிவரும் தும்மல், 30 செ.மீ துாரம் வரை பயணித்து தரையை நோக்கி சென்றது. வீட்டில் பயன்படுத்தும் கைக்குட்டை துணியை இரண்டு அடுக்காக பயன்படுத்தி செய்யப்பட்ட சுவாசக் கவசத்திலிருந்து வெளியேறிய திவலைகள் வெறும், 6 செ.மீ துாரமே சென்றன. இதனால் கைக்குட்டையால் செய்த கவசம் ஒன்றும் சாதாரணமானதல்ல என்ற முடிவுக்கு வந்தனர் சித்தார்த் குழுவினர்.

இந்த ஆய்வு முடிவுகள், சுவாசக் கவசங்களின் அவசியத்தை மீண்டும் உறுதி செய்வதோடு, சமூக இடைவெளியும், தொற்றிலிருந்து காத்துக் கொள்வதற்கு மிகவும் முக்கியம் என்பதையும் உணர்த்துவதாக சித்தார்த் தெரிவித்துள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Murthy - Bangalore,இந்தியா

    கிரேட்...

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    வெளியில் விற்கும் முக கவசங்களை வாங்காதீர்கள் உங்கள் கைக்குட்டை போதுமே என்று இதனால் தெரிகின்றது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement