Advertisement

'கோவிட் -- 19' வைரஸ் பற்றிய 4 உண்மைகள்

Share

கொரோனாவின் பன்னாட்டுத் தாக்குதல் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் முழுமையாக அறியப்படாத இந்த கொடிய வைரஸ் பற்றி மருத்துவ விஞ்ஞானிகள் மெல்ல மெல்ல அறியத் துவங்கியுள்ளனர். தற்போதைக்கு உறுதியாக தெரிந்துள்ள, 4 உண்மைகள் இதோ:

1. ரத்தம் உறைந்து கட்டியாக்குகிறதுஎந்த கிருமி தொற்றினாலும், அவை ரத்தம் கட்டி யாவதற்கு வழி வகுக்கும். ஆனால், மற்ற எந்த கிருமிகளை விடவும், கொரோனா வைரசுக்கு ரத்தத்தை கட்டியாக்கும் தன்மை அதிகம். கொரோனா தாக்கிய நோயாளிக்கு நுரையீரல், இதயம், மூளை, சிறுநீரகம் என, எந்த உறுப்புக்கு செல்லும் ரத்தக் குழாயில் ரத்தம் கட்டியானால், அந்த உறுப்புக்கு ஆக்சிஜன் குறைந்து பெருத்த பாதிப்பு ஏற்படும்.

2. வாசம் உணரும் திறனை பாதிக்கிறதுமூக்கின் வழியாக நுழையும் கொரோனா வைரஸ், முதலில் மூக்கின் முன்பகுதியில், வாசனை அறியும் செல்களை குழப்பி விடுகிறது. இதனால் தான் உலக சுகாதார நிறுவனம் இதையும் கொரோனாவுக்கான அறிகுறியாக அண்மையில் சேர்த்து உள்ளது.

3. சில குழந்தைகள் மீது பல நோய்களை ஏவுகிறதுஉலகெங்கும் பெரும்பாலான குழந்தைகளை கோவிட் - 19 தாக்குவதில்லை என்ற தோற்றம் நீடிக்கிறது. என்றாலும், சில குழந்தைகள் மீது மட்டும் பல்முனை தாக்குதலை நிகழ்த்தியுள்ளதை பிரிட்டன் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த குழந்தைகளின் நோய் எதிர்ப்பு அமைப்பு கடுமையாக போராடுவதன் விளைவாக கூட, இந்த நோய்கள் ஏற்படலாம் என, மருத்துவர்கள் கருதுகின்றனர்.

4. விலங்குகளிலிருந்து மனிதனுக்கு தாவி, மீண்டும் விலங்குகளுக்கு தொற்றும்கொரோனா பரவலின் தொடக்கத்திலேயே, அது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றியது உறுதியானது.ஆனால், மீண்டும் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவுமா? ஆம் என்கின்றன ஆய்வுகள். வீட்டு செல்லப் பிராணிகள், பண்ணை விலங்குகள், மிருகக்காட்சி சாலை விலங்குகள் போன்றவை அண்மையில், மனிதர்களிடமிருந்து தொற்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement