Advertisement

'கோவிட்- - 19' ஆய்வுக்கு உதவும் நுரையீரல் செல்கள்

Share

ஆஸ்திரேலியாவிலுள்ள, சி.எஸ்.ஐ.ஆர்.ஓ., நிலையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ் மனித உடலில் நுழைந்ததும், எப்படி தாக்குகிறது என்பதை கண்டறிய புதிய சோதனை உத்தியை உருவாக்கியுள்ளனர்.

மனித நுரையீரலின் மேல் பகுதியில் உள்ள சுவாசக் குழாயிலிருந்து செல்களை எடுத்து, அவற்றை ஆய்வகத்தில் வளர்க்கின்றனர். பின்னர், அந்த செல்களிடையே, 'கோவிட் - 19' வைரசை செலுத்தி, மனித செல்கள் எப்படி பாதிப்புக்கு உள்ளாகின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்காணிப்பர்.

ஆய்வுக்கு, சர்க்கரை நோயாளிகள், ஆஸ்துமா உள்ளோர் என்று பலவகை மனிதர்களின் சுவாசக் குழாய் செல்களையும் ஆய்வகத்தில் வளர்த்து, இதேபோல் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மிகவும் புத்திசாலித்தனமான இந்த ஆய்வுகளினால், இன்னும் சரியாக புரிந்து கொள்ள முடியாத கொரோனா வைரஸ் பற்றி நன்கு அறிய முடியும். மேலும், கொரோனாவை கொல்ல உருவாக்கப்படும் மருந்துகளையும் இதுபோன்ற தொற்று ஏற்பட்ட செல்களின் மீது செலுத்தி, அவை பலன் தருகின்றனவா என, அறியவும் முடியும்.தவிர, இந்த வித சோதனைகள் விலங்கு சோதனைகளுக்கான தேவையை வெகுவாக குறைத்துவிடும். ஒரு புதிய மருந்து, மனிதர்கள் மீதான சோதனை கட்டத்தை எட்டுவதற்கு முன்பே, அதன் பக்க விளைவுகளை அறிந்து கொள்ள முடியும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement