Advertisement

இந்தியாவில் தினமும் 2.87 லட்சம் கொரோனா நோயாளிகள்?

Share

விரைவில் வீரியமான தடுப்பூசி உருவாக்கப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால், 2021 பிப்ரவரி வாக்கில், இந்தியாவில் தினமும், 2.87 லட்சம் புதிய கொரோனா தொற்று நோயாளிகள் உருவாகக்கூடும்.

இப்படித் தான் அமெரிக்காவிலுள்ள, எம்.ஐ.டி.,யை சேர்ந்த சுலோன் மேலாண்மை கல்லுாரியின் ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு சொல்கிறது.உலக மக்கள் தொகையில், 60 சதவீதத்தை கொண்டுள்ள, 84 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது, தொற்று ஏற்பட்டுள்ளோர், தினமும் கொரோனா சோதனை செய்து கொள்வோர், சிகிச்சையில் இருப்போர், குணமாகி வீடு திரும்பியோர் ஆகியோரின் எண்ணிக்கைகளின் அடிப்படையில், இந்த ஆய்வை சுலோன் ஆராய்ச்சியாளர்கள் அலசி ஆராய்ந்துஉள்ளனர்.

பிப்ரவரி, 2021 இறுதி வாக்கில், உலகிலேயே கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருக்கும்.அந்த நேரத்தில், தினமும், 95 ஆயிரம் கொரோனா நோயாளிகளுடன் அமெரிக்கா இரண்டாமிடத்திலும், தென்னாப்ரிக்கா, 21 ஆயிரம் நோயாளிகளுடன் மூன்றாமிடத்திலும்,, ஈரான், 17 ஆயிரம் நோயாளிகளுடன் நான்காமிடத்திலும் இருக்கும் என, ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

விரைவான, உரிய சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மக்களுக்கு வழங்கப்படாவிட்டால், 2021 மார்ச், -மே காலகட்டத்தில், உலக மக்கள் தொகையில், 20 கோடி முதல், 60 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் எனவும் ஆராய்ச்சி யாளர்கள் கணித்துஉள்ளனர். இந்த ஆய்வு தற்போதைய நிலவரத்தை வைத்து, எதிர்காலம் குறித்த சில யூகங்களுடன் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் பெரும்பாலான நாடுகள் கொரோனா நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை உட்பட, பல தகவல்களை, குறைத்தே வெளியிடுவதாக சுலோன் ஆய்வுக் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement