Advertisement

கமிஷனர் கொடுத்த மூணு நாள், 'பார்ட்டி!'

Share

கமிஷனர் கொடுத்த மூணு நாள், 'பார்ட்டி!'


''புகார் மனுக்களை மறைக்கிறாங்க பா...'' என்றபடியே, திண்ணையில் அமர்ந்தார், அன்வர்பாய்.
''எந்த துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''பதிவுத்துறை, ஐ.ஜி., அலுவலகத்துக்கு, பத்திரப்பதிவு சம்பந்தமா, பொது மக்கள் கொடுக்குற புகார்கள், பணியாளர்களோட புகார்கள் வரும்... இந்த புகார்களை, கோப்புகளாக, ஐ.ஜி.,யிடம் கொடுக்க, டி.ஐ.ஜி., இருக்கார் பா...
''அந்த அலுவலகத்துல, தபால்களை பிரிச்சு, உயரதிகாரிக்கு அனுப்புறப்போ, கூடுதல், ஐ.ஜி., ஒருத்தர் தலையிடுறாரு... தனக்கு வேண்டியவர்கள் பத்தின புகார்களை மடக்கிடுறாரு... இதனால, பணியாளர்களின் புகார்கள், டி.ஐ.ஜி., - ஐ.ஜி., பார்வைக்கு போறதில்லையாம் பா...
''ஐ.ஜி., மேல, பணியாளர்களுக்கு அதிருப்தி ஏற்படணுமுன்னு, அந்த கூடுதல், ஐ.ஜி., இப்படி செய்யறாருன்னு, அலுவலகத்துல பேசிக்கிறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
குப்பண்ணா, ''கொரோனா இம்சை முடிஞ்சதும், சீனிவாசனை தரிசனம் செஞ்சுடணும் ஓய்...'' என்றபடியே, அடுத்த தகவலுக்கு மாறினார்.
''முதல்வர் இ.பி.எஸ்., சமீபத்துல, திருச்சிக்கு போனப்போ, பேட்டி அளிக்கறச்சே, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை ஒரு பிடிபிடிச்சுட்டார்...'' என்ற குப்பண்ணா,
தொடர்ந்தார்...
''இதுக்கு பதில் அளிக்கற வகையில, அடுத்த நாள், தி.மு.க., முதன்மை செயலர், நேரு, நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார் ஓய்...
''அதுல கலந்துண்ட, தனியார் நியூஸ் சேனல் நிருபர் ஒருவருக்கு, 'கொரோனா' இருப்பது, அன்னிக்கே உறுதியாயிருக்கு... இதைக் கேள்விப்பட்ட நேருவும், தி.மு.க., நிர்வாகிகளும் அரண்டு போயிட்டா ஓய்...
''நேரு உடனே, தனியார் மருத்துவமனைக்கு போய், கொரோனா பரிசோதனை செஞ்சுருக்கார்... அதுல, 'நெகட்டிவ்' வந்தாலும், லால்குடி அருகே இருக்கற, பண்ணை வீட்டுக்கு போய், ஒருநாள் முழுசும் ஓய்வு எடுத்துண்டு, ஆசுவாசப்படுத்திண்டு இருக்கார் ஓய்...
''அதேபோல், மத்த தி.மு.க., நிர்வாகிகளும், 'டெஸ்ட்' எடுத்து பார்த்ததுல்ல, 'நெகடிவ்' வந்துடுத்து... இனிமே, கூட்டம் நடக்கற பக்கமே போகக் கூடாதுன்னு உறுதி எடுத்துண்டு, வீட்டுக்குள்ளேயே இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''ஊரடங்கிலும், 'பார்ட்டி' நடந்துருக்குங்க...'' என, கடைசித் தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.
''என்ன சொல்லுறீங்க வே...'' என, அதிர்ச்சியுடன் கேட்டார், அண்ணாச்சி.''திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரா இருக்குறவரு, ஜூன் மாசத்துல பணி ஓய்வு பெற்றார்...
''அதனால அவரு, கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்துல, ஏ.சி.,க்களுக்கு, இன்ஸ்பெக்டர்களுக்கு, கமிஷனர் அலுவலகத்தில் வேலை பார்க்குறவங்களுக்குன்னு, மூணு நாட்கள், தனித்தனியாக பார்ட்டி வைத்து அசத்திஇருக்காருங்க...
''பார்ட்டி நடந்த மண்டபத்துக்கு பக்கத்துல தான், பல போலீசார், கொரோனாவால் பாதிக்கப்பட்டதால, தடை செய்யப்பட்ட போலீஸ் குடியிருப்பு இருக்குங்க...'' என முடித்தார்,
அந்தோணிசாமி.மொபைல்போனில், ''ஹலோ வரதராஜா... நம்மூருல மழை பெய்யுதா வே...'' என, விசாரித்துக் கொண்டிருந்தார், அண்ணாச்சி. மற்றவர்கள், இடத்தை காலி செய்தனர்.

எஸ்.பி., பதவியை பிடிக்க முட்டி மோதும் அதிகாரி!''திட்டத்துக்கு ஒப்புதல் குடுக்காம வச்சிருக்காவ வே...'' என்றபடியே, அந்தோணிசாமி வீட்டில் சங்கமித்தார், அண்ணாச்சி.
''என்ன திட்டத்தை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''மதுரை நீதிமன்ற வளாகத்துல, 30க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இருக்கு... தரை, இரு தளங்கள்ல இந்த நீதிமன்றங்கள் செயல்பட்டாலும், பொதுமக்கள், வக்கீல்கள்னு நிறைய பேர் வந்துட்டு போறதால, கடும் இடநெருக்கடி நிலவுது வே...
''நீதிமன்ற வளாகத்துல நிறைய காலியிடம் இருக்கு... 'அந்த இடத்துல, ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் கட்டணும்'னு, வக்கீல்கள் கோரிக்கை வச்சிட்டே இருந்தாவ வே...
''இதுக்காக, பொதுப்பணித் துறையும், ஒருங்கிணைந்த வளாகம் கட்ட, திட்ட மதிப்பீடு தயாரிச்சு, அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வச்சிட்டு...
''ஆனா, இன்னும் ஒப்புதல் தராம, அரசு தரப்புல இழுத்தடிக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''உள்ளாட்சி தேர்தல் நடக்காத ஊர்கள்ல, நல்லாவே கல்லா கட்டுறாங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''தமிழகத்துல, புதுசா உருவாக்குன கள்ளக்குறிச்சி, திருப்பத்துார், தென்காசி உட்பட அஞ்சு மாவட்டங்கள், அதை ஒட்டிய நாலு மாவட்டங்கள்ல, உள்ளாட்சி தேர்தல் நடக்கலை... இங்க எல்லாம், தனி அதிகாரிகள் கட்டுப்பாட்டுல தான், உள்ளாட்சி நிர்வாகங்கள் இயங்குதுங்க...
''மற்ற இடங்கள்ல, மக்கள் பிரதிநிதிகள் கையில நிர்வாகம் இருக்கிறதால, ஓரளவுக்கு மக்களுக்கு பயந்து, வெளிப்படையா நிர்வாகத்தை நடத்துறாங்க...
''ஆனா, இந்த ஒன்பது மாவட்டங்கள்லயும், குடிநீர், சாலை மற்றும் கால்வாய் சீரமைப்புன்னு பல திட்டங்கள்ல, அதிகாரிகள் புகுந்து விளையாடுறாங்க...
''கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், கொரோனா தடுப்பு பணியில, 'பிசி'யா இருக்கிறதால, உள்ளாட்சி அதிகாரிகளின் ஊழலை கண்டிக்க, ஆளே இல்லாம போயிடுச்சுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எஸ்.பி., பதவிக்கு முட்டி மோதிண்டு இருக்கார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.''எந்த ஊர் அதிகாரியை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''தமிழகத்துல சீக்கிரம் காலியாகப் போற, எட்டு, எஸ்.பி., பணியிடங்கள்ல நான்கை, நேரடி ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கும், மீத நான்கு இடங்களை, பதவி உயர்வுலயும் நிரப்ப இருக்கா ஓய்...
''டாலர் சிட்டியில இருக்கற ஒரு போலீஸ் அதிகாரி பெயர், எஸ்.பி., பதவி உயர்வு பட்டியல்ல இருக்கு... இந்த அதிகாரி, சமீபத்துல சொந்த ஊருக்கு போயிருந்த முதல்வரைப் பார்த்து, எஸ்.பி., பதவி கேட்டு, மனுவே குடுத்திருக்கார் ஓய்...
''ஈரோடு, எஸ்.பி., பதவிக்கு முதல்ல காய் நகர்த்தினார்... ஆனா, அங்கே இப்ப இருக்கறவரை மாற்ற, மாவட்ட அமைச்சர் செங்கோட்டையனுக்கு விருப்பம் இல்லை ஓய்...
''அதனால, சேலம் சட்டம் - ஒழுங்கு துணை கமிஷனர் பணியிடத்தை வாங்கிடணும்னு, நம்ம அதிகாரி முட்டி மோதிண்டு இருக்கார்... இதுக்காக, ஆளுங்கட்சி புள்ளிகளை பார்த்துண்டு இருக்கார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
அரட்டை முடிந்து, தெருவில் இறங்க, எதிரில் வந்தவரை பார்த்த அண்ணாச்சி, ''குணசேகரன், இன்னைக்கு டூட்டிக்கு போகலையா...'' எனக் கேட்டு பேச, மற்றவர்கள் நடையைக் கட்டினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Aarkay - Pondy,இந்தியா

    ''மற்ற இடங்கள்ல, மக்கள் பிரதிநிதிகள் கையில நிர்வாகம் இருக்கிறதால, ஓரளவுக்கு மக்களுக்கு பயந்து, வெளிப்படையா நிர்வாகத்தை நடத்துறாங்க... சூப்பர் ஜோக் ஒவ்வொரு கௌன்சிலரும் பண்ற அலம்பல் எங்களுக்குத்தான் தெரியும் அரசியல்வாதிகளைவிட அரசு அதிகாரிகள் எவ்வளவோ மேல் கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கு ரொட்டித்துண்டுகளைப்போடவே உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகள் என்ற பதவி

  • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

    அதெப்படீங்க மந்திரிகள் வித் போல்பல அதிகாரிகள் எல்லாம் சட்டமொழுங்கை மீறலாமா இல்லே அவாளுக்கு தனியா சட்டம் இருக்கா தமிழ்நாட்டுலே எல்லாம் இப்படியேதானுங்கோ ஊருக்கே உபதேசம்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாருமே விதிகளை மீறி பார்ட்டி, திருமண விழா எல்லாம் கொண்டாடுவார்கள். முதல்வர் மட்டும் ‘மக்களால்தான் கொரானா பரவுகிறது’ என்று கிளிப்பிள்ளை போல் படம் ஒப்பிப்பார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement