Advertisement

பெட்டியின் கிருமி நீக்கும் கருவி!

Share

விமானம், ரயில், பஸ் மூலமாக தான் கோவிட்-19 வைரஸ் பரவியது. தொடர்ந்து பரவியும் வருகிறது. இதனால், பயணியர்கொண்டு வரும் பைகள், பெட்டிகளை தொற்று நீக்கம் செய்வது அவசியம்.

இதற்காக தான், கொச்சியிலுள்ள, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின், டி.ஆர்.டி.ஓ., பிரிவு, அதே நகரத்திலுள்ள அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து ஒரு கருவியை உருவாக்கி உள்ளது.

மோட்டார் உதவியுடன் சுழலும் உருளைகளைக் கொண்ட, 'கன்வேயரில்' பெட்டியை வைத்தால், அது,புற ஊதா கதிர் விளக்குகள் பொறுத்திய இன்னொரு பெட்டி போன்ற அமைப்புக்குள் செல்கிறது.

பெட்டியின் எல்லா புறமும், போதிய அடர்த்தியில், போதிய வினாடிகளுக்கு புற ஊதாக் கதிர்கள்பாய்வதால், கொரோனா உள்ளிட்ட தொற்று கிருமிகள் மடிந்துவிடும்.

இந்த கருவியை, விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் நிறுவி, பயணியரின் உடைமைகளை தொற்று நீக்கம் செய்ய முடியும் என, கொச்சி டி.ஆர்.டி.ஓ., ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் அறிவித்துள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement