Advertisement

வேலையை பாதுகாக்கும் கவசம்!

Share

தான்சானியாவில் பழைய காகிதம், அட்டை பெட்டி களை சேகரித்து இந்தியாவுக்கும், சீனாவுக்கும் ஏற்றுமதி செய்து வந்தது சயிதி ரீசைக்கிளர்ஸ். பொது முடக்கம் போடப்பட்டதும், அந்த தொழில் படுத்துவிட்டது.

பணியாளர்களை நீக்குவதற்கு பதில், தொழிலை சற்றே மாற்றிக் கொண்டு துாள் கிளப்புகிறது, சயிதி ரீசைக்கிளர்ஸ்.ஏற்கனவே பழைய பிளாஸ்டிக் குப்பைகளையும் அது சேகரித்து வந்ததால், அதை வைத்து, பிளாஸ்டிக் நிறுவனங்களிடம் பிளாஸ்டிக் முக கவசங்களை தயாரித்து விற்பனை செய்யத் துவங்கியுள்ளது.

கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாப்பதோடு, வேலை இழப்பிலிருந்து பணியாளர்களையும் காப்பாற்றியுள்ளது, அந்த நிறுவனம்.அதோடு, பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கும் தன்னா லான பங்களிப்பை அது செய்து வருகிறது. நல்ல தொழில் தான், இல்லையா?

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement