Advertisement

'காப்பி அண்டு பேஸ்ட்' திட்டத்தில் கலக்கும் முதல்வர்!

Share

'காப்பி அண்டு பேஸ்ட்' திட்டத்தில் கலக்கும் முதல்வர்!


''அமைச்சரை, வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க...'' என, திண்ணையில் பேச்சை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''எந்த அமைச்சரை, யாருவே திட்டுனா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதி, எம்.எல்.ஏ.,வா இருக்காங்க... சமீபத்துல, மணிகண்டம் ஒன்றிய அலுவலகத்துல, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு போயிருந்தாங்க...''அங்கே வந்த, ஒன்றிய பெண் கவுன்சிலர் அமிர்தம், 'நான், இந்த ஏரியா கவுன்சிலரா இருக்கேன்... உங்களை மாதிரி, நானும் இரட்டை இலையில நின்னு தான் ஜெயிச்சேன்... ஆனா, இந்த விழா பத்தி, எனக்கு தகவலே இல்லை...''கவுன்சிலர்னா இளக்காரமா... நீங்களும் ஒரு காலத்துல, கவுன்சிலரா இருந்து தான், அமைச்சராகி இருக்கீங்க... அதை மறந்துடாதீங்க'ன்னு சத்தம் போட்டுட்டு, 'விறுவிறு'ன்னு போயிட்டாங்க... அமைச்சர் நொந்து போய், கட்சி நிர்வாகிகளை முறைச்சிட்டு போயிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''தி.மு.க.,வுக்கு எதிர்க்கட்சி, அ.தி.மு.க.,வா, பா.ஜ.,வான்னு கேள்வி எழுந்திருக்கு ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.''இதுல என்ன சந்தேகம்... அ.தி.மு.க., தானே பா...'' என்றார், அன்வர்பாய்.''ஆனா, மதுரையில, தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தான் எலியும், பூனையுமா இருக்கா... மதுரை கிழக்கு தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., மூர்த்தி... இங்க போட்டியிட்டு தோத்து போனவர், பா.ஜ., மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன்...''இந்தத் தொகுதியில கொரோனா நிவாரணம் வழங்கின, பா.ஜ.,வினர், 'தொகுதி எம்.எல்.ஏ., எங்கே?'ன்னு போஸ்டர் ஒட்டி, தி.மு.க.,வினரை கடுப்பேத்தினா... அதோட, மூர்த்தி மேல ஊழல் குற்றச்சாட்டுகளையும் அடுக்கினா ஓய்...''கடுப்பான மூர்த்தி, பா.ஜ., இளைஞரணி நிர்வாகி சங்கர பாண்டியை, வீடு தேடி மிரட்ட, ரெண்டு தரப்புலயும், போலீஸ், கேஸ்னு அக்கப்போர் நடந்துண்டு இருக்கு... 'நம்ம வேலையை, பா.ஜ.,காரா செய்யறாளே'ன்னு அ.தி.மு.க., தரப்பும் ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்த்துண்டு இருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.''தனி ஆபீஸ் பார்த்து, பூஜை போட்டுட்டாரு பா...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார், அன்வர்பாய்.''யாரு, எங்க வே ஆபீஸ் போட்டிருக்கா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூக நிபுணரா, சுனிலை நியமிச்சிருக்காங்களே... இவர், சென்னையில தனி அலுவலகம் திறந்து, பூஜை எல்லாம் போட்டு, பணிகளை ஆரம்பிச்சிட்டாரு பா...''முதல் கட்டமா, தன் நிறுவனத்துல, 15 பேரை பணிக்கு சேர்த்திருக்கார்... சுனில் ஆலோசனைப்படி தான், முதல்வர் வெளி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் போக ஆரம்பிச்சிருக்காரு பா...''இதே சுனில், 'நமக்கு நாமே'ன்னு ஸ்டாலினுக்கு வகுத்து குடுத்த திட்டத்தை தான், இப்ப, முதல்வருக்கும், 'காப்பி அண்டு பேஸ்ட்' பண்ணியிருக்கார்... ''அதனால தான், முதல்வரும் போற வழியில, திடீர்னு காரை நிறுத்தி, பொதுமக்களிடம் குறைகள் எல்லாம் கேட்டு கலக்குறாரு பா...'' என விளக்கி முடித்தார், அன்வர்பாய்.அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அன்று திமுகவுக்கு ஆலோசனை, அதையே இன்று அதிமுகவுக்கு இரண்டு பக்கமும் ஒரே பாட்டு. இதற்கு சம்பளம், கன்சல்டன்ட் பீஸ் சபாஷ்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement