Advertisement

வைரசை ஆராய, சேமிக்கும் மத்திய அரசு!

Share

இந்தியாவை உலுக்கி வரும், 'கோவிட் - -19' வைரசை முழுமையாக ஆராய்ச்சி செய்ய, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.இதற்கென, இந்தியாவின் பல பகுதிகளில், அரசு மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகளிலிருந்து கொரோனா வைரசை பிரித்தெடுத்து, பாதுகாக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு வெப்பநிலைகளில் கொரோனாவின் அமைப்பு, தன்மை ஆகியவற்றை மரபணு ஆய்வு மேற்கொள்ள இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொள்ள இது மிகவும் அவசியம்.அதுமட்டுமல்ல, நம்பகமான கொரோனா தொற்று நோயறிதல் கருவிகளை இந்தியாவிலேயே தயாரிக்கவும், புதிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை இந்தியாவிலேயே உருவாக்கவும் இந்த சேமிப்பு மிகவும் உதவிகரமாக இருக்கும்.கோவிட்- - 19 வைரசின் மாதிரிகளை எப்படி சேகரிப்பது, அவற்றை எப்படி ஆய்வுக் கூடங்களில் பாதுகாப்பது என்பதற்கான அடிப்படை விதிகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், அரசு மருத்துவமனைகள் மற்றும் தொற்று நோயியல் ஆய்வகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement