Advertisement

எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு..

Share

அப்போது பாரதிக்கு வயது பதினன்கு. செல்லம்மாள், பாரதியின் வாழ்க்கைத் துணைவியானாள். அப்போது அவருக்கு வயது ஏழு. அந்தக் காலத்தில் திருமண விழா ஒரே நாளில் முற்றுப் பெறாது. நான்கு நாட்கள் தொடர்ந்து நடை பெறும்.
திருமண சடங்குகளில் ஒன்றான ஊஞ்சலாடும் விழாவில் மணமகனாக பாரதியும் -செல்லம்மாளும் அமர்ந்திருக்கசுற்றியிருப்பவர்கள் பாட்டுப்பாடி நலுங்கு சுற்றவேண்டும், பாட தயக்கம் காட்டிய போது பாரதி நானே பாடுகிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு பாட்டி பாடினார்'தேடிக் கிடைக்காத சொர்ணமேஉயிர் சித்திரமே மட அன்னமேகட்டியணைத் தொரு முத்தமே - தந்தால்கை தொழுவேன் உனை நித்தமே!'
செல்லம்மாளுக்கு நிச்சயம் அர்த்தம் தெரிந்திருக்காது ஆனாலும் வெட்கத்தால் முகம் சிவந்துபோனார் அதற்கு சுற்றி இருப்பவர்கள் சிரித்த சிரிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.
பாரதிக்கும்-செல்லம்மாளுக்கும் திருமணம் நடந்து 123 வருடமாகிறது.
இவர்களது திருமணம் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் என்ற கிராமத்தில் நடைபெற்றது இந்த கிராமம்தான் செல்லம்மாள் பிறந்த ஊருமாகும்.
பாரதி மீது பிரியம் கொண்ட சென்னை சேவாலய முரளி என்பவர் கடந்த வருடம் கடையத்தில் பாரதி-செல்லம்மா திருமண நாளை விழாவாகக் கொண்டாடினார். இந்த வருடம் கொரோனா காரணமாக யாரும் ஊரைவிட்டு நகல முடியாத சூழ்நிலை ஆனாலும் விழாவினை ஆன்லைன் உதவியுடன் நடத்துவது என்று முடிவு செய்து அதன்படி விழா நேற்று நடைபெற்றது.
கடையத்தில் உள்ள பாரதி சத்திரம் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட மேடையில் பள்ளி மாணவியர் தோன்றி பாரதியின் தேசபக்தி பாடலை பாடினர்.திருமண விருந்து போட்டால் ஒரு நாள்தான் போடவேண்டியிருந்து இருக்கும் இங்கே ஒரு மாதம் விருந்து கொடுக்கிறோம் என்று ஏழை எளியவர்களுக்கு ஒரு மாதத்திற்கான அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
பின் சிறப்பு விருந்தினராக இசைக்கவி ரமணன் பேசினார் தனது பேச்சில் செல்லம்மாளின் சகோதரர் அப்பாதுரை பாரதி மீது காட்டிய அன்பையும் அவர் பாரதி மீது வைத்திருந்த மரியாதையையும் நெகிழ்ச்சியோடு விவரித்தார்.கூடவே கடையத்தில் பாரதியின் பாடல்கள் பிறந்த சூழலையும் சம்பந்தப்பட்ட பாடல்களையும் பாடி மகிழ்வித்தார்.
பாரதியாரின் கொள்ளுப் பேரனான ராஜ்குமார் பாரதி பேசும் போது தன் அம்மா மூலமாக தனது கொள்ளுப்பாட்டியான செல்லம்மாள் பாரதியைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டதாக குறிப்பிட்டார்.
எப்போது மனைவிக்கு கடிதம் எழுதினாலும் எனதருமைக்காதலி செல்லம்மாளுக்கு ஆசீர்வாதம் என்று சொல்லித்தான் ஆரம்பிப்பார், ‛உனதன்பன்' என்று கூறித்தான் முடிப்பார்.
ஒரு முறை பாரதி காசியில் இருந்த போது செல்லம்மாள் கவலைப்பட்டு ஊருக்கு திரும்பி வரச்சொல்லி கடிதம் எழுதிய போது பதிலுக்கு, ‛உன்னை யாரோ குழப்பியிருக்கிறார்கள் நான் நலமே நீ என்னைப்பற்றி கவலைப்படுவதை விட்டு தமிழ் படிப்பாயேயானால் அதுவே நல்லது' என்று பதில் போட்டவர் என்றெல்லாம் குறிப்பிட்டார்.
நிறைவாக சேவலயா முரளி கூறுகையில் கடையத்தில் பாரதி- செல்லம்மாள் ஆகிய இருவரது சிலையும் வைக்க முடிவாகி சிலையும் தயராகிவிட்டது, ஆனால் கொரானா காரணமாக இதற்கான வேலை தாமதமாகி வருகிறது எல்லாம் நல்லபடியாக நடந்தால் விரைவில் சிலை இங்கு நிறுவப்படும் என்றார்.
-எல்.முருகராஜ்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • I love Bharatham - chennai,இந்தியா

  பாரதியார் ஒரு சித்தர் .....குரு பூர்ணிமா அன்று அவரை நினைப்பதில் வணங்குவதில் பெருமை கொள்கிறேன்

 • Syed Mustafa - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தமிழ் மண் செய்த பாக்கியம் ...வேங்கை நிகர் பாரதி .

 • IYER AMBI - mumbai,இந்தியா

  தமிழ்த்தாயின் செல்ல மகன். அவரை பெருமைப்படுத்தினால் தமிழுக்கு கெளரவம், மரியாதை செய்வதுபோலாகும்.

  • A P - chennai,இந்தியா

   கரை வேட்டிகள பாரதியாரின் ... ஒழித்து / அழித்து விட்டார்கள் பாருங்கள்.

 • K.Muthuraj - Sivakasi,இந்தியா

  சமுதாய புரட்சி வீரன் என்றால் பாரதியார் மட்டுமே. அவர் கால கட்டத்தில் தம் சமுதாய மக்களையே எதிர்த்து புரட்சி செய்தவர். அவர் சொற்களில் கனல் தெறிக்கும்.

 • Prabu - Chennai,இந்தியா

  தமிழனும் தமிழும் உள்ளவரை உனது புகழ் இப்புவியில் என்றென்றும் நிலைத்து இருக்கும், வாழ்க எமது பாரதி புகழ்.

 • Kadambur Srinivasan - Chennai,இந்தியா

  வாழ்க பாரதி புகழ்

 • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

  இன்று சரக்கு மிடுக்கு என்று உயர்சாதியினராக திரியும் கோட்டு சூட்டு போட்டு கொலைத்தொழில் புரியும் மாக்கள்

  • naadodi - Plano,யூ.எஸ்.ஏ

   what are you trying to convey? be clear & concise

 • samkey - tanjore,இந்தியா

  பிராமணர் என்ற ஒரே காரணத்துக்காக திருட்டு திராவிடர்களாலும் , உண்மையான முற்போக்கு சிந்தனைக்காக பிற்போக்கு பிராமணர்கலாலும் வெறுக்கப் பட்டவர். ஆனால் உண்மையான தமிழர்களும் தமிழை நேசிப்பவர்கழும் இந்தியர்களும் இருக்கும் வரை இந்த மஹாகவியை மறக்க மாட்டார்கள், வாழ்க நீ எம்மான்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement