Advertisement

கொரோனா சோதனைக்கு உதவும், 'கிட்'டு

Share

அனைத்து மாநிலங்களிலும், அதிவேக கொரோனா சோதனைக்கு உதவும், 'கிட்'டுக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தாக்குதலிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தோரின் ரத்தத்தில் உள்ள, கொரோனா எதிர்ப்பணுக்களை வைத்து, இந்த சோதனை கிட் தயாரிக்கப்படுகிறது.

இந்த சோதனையில், 30 நிமிடங்களுக்குள் ஒருவருக்கு கொரோனா உள்ளதா, இல்லையா என்பது தெரிந்துவிடும். இதன் விலை, 450 ரூபாய்.தென்கொரியாவைச் சேர்ந்த, 'எஸ்.டி.பயோசென்சார்' உருவாக்கியுள்ள இந்த சோதனை கிட்டுக்கு, 'ஸ்டாண்டர்ட் கியூ கோவிட் - 19 ஏ.ஜி.,' என்று பெயர். இந்த கிட்டை பயன்படுத்த, வேறு வேதிப்பொருட்களோ, மின்சாரமோ தேவையில்லை. மேலும், வெறும் கண்ணாலேயே பார்த்து சோதனை முடிவை சொல்லிவிட முடியும்.

புதுடில்லி பகுதியில், கடந்த சில வாரங்களாக இந்த கிட்டின் நம்பகத்தன்மையை, ஐ.சி.எம்.ஆரும், எய்ம்ஸ் மருத்துவமனை குழுவினரும் தனித்தனியே சோதித்தனர். இந்த சோதனையில், எஸ்.டி.பயோ சென்சாரின் கிட்டுகள் பெரும்பாலும் துல்லியமாக இருப்பதை உறுதி செய்தனர். இதனை அடுத்தே, இந்தியா முழுவதும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement