Advertisement

சமூக இடைவெளி தரும் பேருந்து!

Share

லண்டனை சேர்ந்த வாகன தயாரிப்பாளரான 'அரைவல்' பொது போக்குவரத்தில் மின் வாகனங்களை அதிகப்படுத்துவதற்காகவே தொடங்கப்பட்டது. அதன் முதல் மின்சார பேருந்து அறிமுகமாவதற்குள்ளாக கொரோனா தாக்குதல் நிகழ்ந்துவிட்டது. எனவே, புகையில்லா போக்குவரத்து என்பதோடு, சமூக இடைவெளி, சுத்தம் ஆகிய இரண்டு அம்சங்களையும் தங்கள் தயாரிப்பின் முக்கிய கொள்கைகளாக சேர்த்துக்கொண்டுள்ளது.

இதற்கென, இரட்டை இருக்கை வரிசை கொண்ட, 'அரைவல்' மின்சார பேருந்தை, உடனடியாக ஒற்றை இருக்கை வரிசை கொண்ட பேருந்தாக மாற்றும் வசதியுடன் அண்மையில் ஒரு பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது, அரைவல் நிறுவனம். ஓட்டுனருக்கு பாதுகாப்பான அறை, நடத்துனரே தேவையில்லாதபடிக்கு, மின் அறிவிப்பு பலகை மற்றும் ஒலிபெருக்கி போன்ற வசதிகளும் இந்த வண்டியில் உண்டு.

அதேபோல, பிரிட்டனில் தயாரித்து ஏற்றுமதி செய்வதை தவிர்த்து, அந்தந்த நாடுகளில் சிறு தொழிற்சாலைகளை நிறுவி, அரைவல் பேருந்துகளை தயாரித்து விற்கப்போவதாகவும் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement