Advertisement

வைரசை எதிர்க்கும் உடைக் கவசம்!

Share

முக கவசம், சோப்பால் கை கழுவுதல், சமூக இடைவெளி, கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தின் இந்த மூன்று ஆயுதங்களுக்கு அப்பால், நான்காவதையும் சேர்க்கலாம் என்கின்றனர், ஆடை உற்பத்தியாளர்கள்.

பிரேசிலை சேர்ந்த, 'டாலிலா டெக்ஸ்டைல்' வைரஸ்களை அண்டவிடாமல் தடுக்கும், 'வைரோ பார்முலா' நுாலிழைகளை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளது.மிக நுண்ணிய வெள்ளித் துகள்களில் தேய்க்கப்பட்ட நுாலிழைகளால் நெய்த உடையில், கொரோனா வைரஸ் ஒட்டிக்கொள்ள நேர்ந்தால், அந்த வைரசின் வெளிப்புற பகுதியில் வெள்ளித் துகள்கள் வேதிவினை புரிந்து, செயலிழக்கச் செய்துவிடுகின்றன.

இதனால், உடை அணிந்திருப்பவரை, செயலிழந்த கொரோனா வைரசால் தொற்ற முடியாது என்பதோடு, மற்றவருக்கும் பரவ முடியாது. வைரோ பார்முலா நுாலிழைகளால் நெய்த உடைகளை, 20 முறை துவைக்கும் வரை, வைரஸ் எதிர்ப்புத் திறன் இருக்கும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement