Advertisement

கழிப்பறையில் கொரோனா?

Share

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, டாய்லெட்டின் மூடியை மூடிய பின், 'பிளஷ்' செய்வது நல்லது என்கின்றனர், சீனாவிலுள்ள யாங்ஷு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரகள்.

டாய்லெட்டை பிளஷ் செய்யும்போது ஏற்படும் நீர் சுழற்சியால், கண்ணுக்குத் தெரியாத நுண் திவலைகள், டாய்லெட்டுக்கு மேலே, 1 மீட்டர் உயரம் வரை எட்டலாம் என்று யாங்ஷு விஞ்ஞானிகள் கணக்கிட்டு உள்ளனர்.

கொரோனா வைரஸ் காற்றில் பரவக்கூடியது என்பதும், கொரோனா தொற்றியவருக்கு, அவரது கழிவில் வைரசால் உயிருடன் வெளியேறும் என்பதும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டது.

இதன் பின்னணியில் பார்க்கையில், டாய்லெட்டை, கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும் என்பதோடு, பயன்படுத்திய டாய்லெட்டை, தண்ணீர் விட்டு, 'பிளஷ்' செய்யும்போது, அதன் மூடியை மூடிவிட வேண்டும் என்பது, சரியான சமயத்தில் வெளிவந்திருக்கும் எச்சரிக்கை தான்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Tamilnesan - Muscat,ஓமன்

    "கொரோனா வைரஸ் காற்றில் பரவக்கூடியது என்பதும், ............" என்னமா அடிச்சு விடுறாங்க.....கொரநா வைரஸ் காற்றில் ஒருபோதும் பரவாது என்று உயிரியில் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். சீனாக்காரன் என்றாலே கயிறு திரிப்பவன் என்று அடிக்கடி நிரோபணமாகி உள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement