Advertisement

போதையால கவிழ்ந்த ஆளுங்கட்சி புள்ளி காரு! 'மாஜி' பாதை மாற போறாராம்; எதிர்க்கட்சி

Share

பணி நிமித்தமாக, கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்த சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் கார்ப்பரேஷன் ஆபீசுக்கு புறப்பட்டனர். எஸ்.பி., அலுவலகம் அருகே வட மாநில தொழிலாளர்கள் திரண்டிருந்தனர். அவர்களை, இருப்பிடத்துக்கு திரும்பிச் செல்ல போலீசார் அறிவுறுத்திக் கொண்டிருந்தனர்.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, இதுவரைக்கும், நம்மூர்ல இருந்து வட மாநிலங்களுக்கு, 32 ஸ்பெஷல் டிரெயின் இயக்கியிருக்காங்க. இன்னும் ஏகப்பட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பிப் போறதுக்கு ரெடியா இருக்காங்க. ஒரு டிரெயின் இயக்குறதுக்கு, 14 லட்சம் ரூபாய் வரை பணம் கட்டணுமாம். நிதி கைவசம் இல்லைன்னு மாவட்ட நிர்வாகம் சிறப்பு, ரயில் இயக்குறதை நிறுத்தி வச்சிருக்காம்,'' என, பேச்சை துவக்கினாள்.''மித்து, இதுவரைக்கும், 45 ஆயிரம் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு போயிருக்காங்க. பலரும் சாப்பாட்டுக்கே வழியில்லாம தவிச்சிருக்காங்க. அவங்ககிட்ட சில பேரு, 500 ரூபாய், 1,000 ரூபாய் வசூலிச்சிருக்காங்க. தாசில்தார், ஆர்.டி.ஓ., - டி.ஆர்.ஓ., என, அதிகாரிகள் காதுக்கு எட்டும் வகையில், 'கம்ப்ளைன்ட்' சொல்லியும், யாருமே நடவடிக்கை எடுக்கலையாம். தொழிலாளர்கள் பலரும் கண்ணீரோடு சொந்த ஊர் போயிருக்காங்க,''அப்போது, தாசில்தார் ஜீப், அவர்களை கடந்து சென்றது.அதை பார்த்த மித்ரா, ''சவுத் தாலுகா ஆபீசுல தரகர் நடமாட்டம் ஜாஸ்தி ஆயிடுச்சாமே,'' என, நோண்டினாள்.''அதுவா, 'கொரோனா' பிரச்னைக்கு முன்னாடி, சூலுாரை சேர்ந்த ஒருத்தரு, தன்னுடைய நிலத்தை சப்-டிவிசன் செய்றதுக்கு ஆன்-லைன்ல 'அப்ளை' செஞ்சாரு. அதுக்கு, ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை போலீஸ்காரங்க கைது செஞ்சாங்க. அவரு, இப்போ, சவுத் தாலுகா ஆபீசுல இருக்கற, நகர அளவையர் பிரிவுல வரைபடம் வரைஞ்சு கொடுக்குற வேலையை செஞ்சுக்கிட்டு இருக்காராம். ரேஷன் கடைகளுக்கு ஆய்வுக்கு போற கலெக்டர், தாலுகா ஆபீசுக்கும் போனாருன்னா, நல்லாயிருக்கும்,''லங்கா கார்னர் பாலத்தை கடந்து, டவுன்ஹால் கார்ப்பரேஷன் ஆபீசுக்கு வந்தடைந்தனர். ஸ்கூட்டரை நிறுத்திய இடத்துக்கு பக்கத்தில், 'கொரோனா' தடுப்பு பணி என்ற ஸ்டிக்கருடன், 'இன்னோவா' கார் நின்றிருந்தது.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, சிக்கனத்தை கடைபிடிக்கணும்னு கமிஷனர் அறிக்கை வெளியிட்டிருக்காரு. ஆனா, கார்ப்பரேஷன் அதிகாரிங்க சில பேரு, 'கொரோனா பணி'ன்னு ஸ்டிக்கர் ஒட்டிட்டு, 'இன்னோவா' காருல பறக்குறாங்க. மோட்டார் வாகன சட்டப்படி, சொந்த உபயோகத்துக்கு வாங்குன கார்களை, வாடகைக்கு இயக்கக்கூடாது. அரசாங்க விதிமுறையை மீறி, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் வலம் வர்றாங்க,'' என்றாள்.''அதிருக்கட்டும், அ.தி.மு.க., முக்கிய புள்ளியோட மூன்றெழுத்து இனிஷியலை, முகப்பில் போட்ட, 'ஜாகுவார்' கார், ஆர்.எஸ்.புரம், டிபி ரோட்ல 'நிலை தடுமாறி' கவுந்த மேட்டர் உனக்கு தெரியுமா?''''கேள்விப்பட்டேன். லேட் நைட்ல, அந்த காரை ஓட்டிட்டு வந்த ஆசாமி, 'புல் டைட்'ல இருந்தாராம். பறந்து வந்து திடீரென பாதாளச் சாக்கடை குழியில காரை கவுத்துட்டாரு... டிரைவர் சீட்ல இருந்து நிற்கவே முடியாம வெளியே வந்த அவரு, 'நான் யார் தெரியுமா...' ன்னு வீர வசனம் பேசிட்டே, மீண்டும் குழியில பொத்துனு விழுந்துட்டாரு.தலையில நல்ல காயம். கூட்டமும் கூடிடுச்சு. அங்கு வந்த போலீஸ்காரங்க, கால்ல விழாத குறையா கெஞ்சி கூத்தாடி, அந்த ஆள, 108 ஆம்புலன்ஸ்சுல ஏத்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வச்சாங்க. போலீஸ் மூலமா விஷயமறிந்த அந்த ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யோ, 'காரு என்னோடதுதான்... ஆனா, அவரு என் குடும்ப ஆளு இல்ல... சொந்தக்காரன்தான்'ன்னு சொல்லி சமாளிச்சுட்டாராம்...'' என்றாள் மித்ரா.''அது சரி, தி.மு.க.,வுல இருக்குற, நம்மூர் 'மாஜி' ஒருத்தரையும், பி.ஜே.பி.,க்கு துாக்கப் போறாங்களாமே,''''அடடே, ஒனக்கும் தெரிஞ்சு போச்சா. கட்சியில, ஜாதி ரீதியா ஓரங்கட்ட ஆரம்பிச்சிட்டதா, சீனியர் நிர்வாகிகள் பலரும் சொல்றாங்க. முக்கியமான நிர்வாகி ஒருத்தரை, துாக்குறதுக்கு பி.ஜே.பி.,யில, 'பிளான்' போட்டிருக்காங்க; பேச்சு நடந்துக்கிட்டு இருக்காம். அவரு மட்டும், கட்சி மாறிட்டா, தி.மு.க., இன்னும் பலவீனமா மாறிடும்னு சொல்றாங்க,''இருவரும் பேசிக்கொண்டே, கார்ப்பரேஷன் ஆபீசுக்கு எதிரே இருந்த பேக்கரிக்கு சென்று, இரண்டு டீ ஆர்டர் கொடுத்தனர்.டீயை வாங்கி உறிஞ்சிய மித்ரா, ''அக்கா, சரவணம்பட்டி லாட்ஜ் விவகாரத்துல கைதானவங்களிடம் போலீஸ் உயரதிகாரிங்க விசாரிச்சிருக்காங்க. அவுங்க யூஸ் பண்ணுன மொபைல் போன்ல, சரவணம்பட்டியை 'ஆட்டிப்படைக்கும்' உளவுப்பிரிவு போலீஸ்காரங்க நம்பர் இருந்துச்சாம். கமிஷனர் ஆபீசுல வேலை பார்க்குற ஒருத்தரின் மகளுக்கும் தொடர்பு இருந்ததாம். கல்லுாரியில படிக்கிற அந்த பெண்ணை மட்டும், வழக்குல இருந்து கழட்டி விட்டுட்டாங்களாம்.''இதே மாதிரி, குனியமுத்துார், போத்தனுார்ல இருக்குற லாட்ஜ்லயும் விபசாரம் நடக்குதாம்; ஆன்-லைன்ல 'புக்கிங்' பண்ணிட்டு வரணுமாம்,'' என, போலீஸ் மேட்டரை புட்டு புட்டு வைத்தாள்.அவளை, பின் தொடர்ந்த மித்ரா, ''அக்கா, மீதமுள்ள, 223 பணியிடத்துக்கு துாய்மை பணியாளர் நியமிக்கப் போறதா சொல்றாங்களே, உண்மையா,'' என, நோண்டினாள்.''அதுவா, ஆளுங்கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க. ஒரு போஸ்ட்டிங்கிற்கு அஞ்சு 'ல'கரம் வரைக்கும் பேரம் பேசியிருக்காங்களாம். இதை கேள்விப்பட்ட அதிகாரிங்க, அதிர்ச்சியில உறைஞ்சு போயிட்டாங்களாம்.''ஏற்கனவே நியமிச்ச தொழிலாளர்களில் பலரும் வேலைக்கு வர்றதே இல்லையாம். சித்தாபுதுார் ஆபீசுல, தொழிலாளியோட அப்பா ஒக்கார்ந்துகிட்டு, கால் மீது கால் போட்டு, கதை பேசிட்டு போறாராம். வேலை செய்யாமலேயே ஏகப்பட்ட பேரு சம்பளம் வாங்குறதா, சானிட்டரி ஒர்க்கர்ஸ் சொல்றாங்க.''அக்கா, சானிட்டரி ஒர்க்கர் ஒருத்தரு ஜோசியம் பார்ப்பாராமே. அசிஸ்டென்ட் கமிஷனர் ஒருத்தரு, அவர், 'சொல்படி' செயல்படுறதா சொல்றாங்க,'' என கிளறினாள் மித்ரா.''அப்படியா, எனக்கு தெரியலை. அடுத்த வாரம் விசாரிச்சு சொல்றேன்,'' என்றபடி, ஸ்கூட்டரை 'ஆன்' செய்தாள் சித்ரா.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement