Advertisement

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு!

Share


பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு!''சம்பள நிலுவையை வழங்கணும்னு கேட்கிறாங்க பா...'' என, அந்தோணிசாமி வீட்டு முற்றத்தில், அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.
''யாருக்கு வே சம்பளப் பாக்கி...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய
ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பளக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தினாங்க...
''அந்த வகையில, வாரிய ஊழியர்கள்,
ஓய்வூதியர்களுக்கு, 2016 ஆகஸ்ட்ல இருந்து, சம்பள நிலுவை
வழங்கணும் பா...
''இதுபோக, ஓய்வூதியர்களுக்கு பணிக்கொடை, விடுப்பு சம்பள நிலுவைன்னு, கணிசமான தொகை வழங்கணும்... ஆனா, வருஷம் நாலாகியும், இதுவரைக்கும், ௧ ரூபாய் கூட வழங்கலை பா...
''கொரோனா நெருக்கடியில இருக்கிற இந்தச் சூழல்லயாவது, சம்பள நிலுவையை வழங்க, வாரிய இயக்குனர் நடவடிக்கை எடுக்கணும்னு, ஊழியர்கள் தரப்புல, மனுக்கள் மேல மனுக்களா
அனுப்பிட்டே இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''முன்தேதியிட்டு, பணியிடங்களை
உருவாக்கியிருக்காங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''தமிழகத்துல புதுசா உருவாக்கப்பட்ட, செங்கல்பட்டு, திருப்பத்துார், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி மாவட்டங்களுக்கு, வேளாண்மை
பொறியியல் துறையில, இணை இயக்குனர் பொறுப்பை, புதுசா உருவாக்கியிருக்காங்க...''கொரோனா சிக்கன
நடவடிக்கையா, புதிய பணியிடங்களை உருவாக்கக் கூடாதுன்னு, தமிழக அரசு அரசாணை வெளியிட்ட மறுநாளே, அவசர, அவசரமா இந்தப்
பணியிடங்களை நிரப்பியிருக்காங்க...''இந்தப் பதவிகளுக்காக, ஆளுங்கட்சி
புள்ளிகளிடம், பலர் லட்சக்கணக்குல பணம் குடுத்திருந்தாங்க... வாங்குன பணத்தை திருப்பி குடுக்க முடியுமா... அதான், முன்தேதியிட்டு, பணியிடங்களை நிரப்பிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பிரதமர் வீடு கட்டற திட்டத்துல, பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துருக்கு ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.
''எங்க வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''பெரம்பலுார், ஆலத்துார் யூனியன், பாடாலுார் ஊராட்சியில, 2017 - 2018; 2018 - 2019 நிதியாண்டுகள்ல, பாரத பிரதமர் வீடு
கட்டும் திட்டத்துல, 40 வீடுகள் கட்டியிருக்கறதா கணக்குல இருக்கு...''ஒரு வீட்டுக்கு, 2 லட்சத்து, 4,900 ரூபாயை அரசாங்கம் ஒதுக்கீடு பண்றது ஓய்... இதுல, சில வீடுகள் கட்டி முடிக்கப்படாமலே, பில் தொகையை
எடுத்திருக்கா... ''அதே மாதிரி, ஒதுக்கீடு வாங்கினவர் வீடு கட்டாம, வேற நபர் கட்டியிருக்கார் ஓய்...''வீடு ஒதுக்கீடு வழங்க, தலா, 35ல இருந்து, 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் அப்போதைய பஞ்சாயத்து செயலர் வசூல் பண்ணியிருக்கார்...
''இம்முறைகேடுக்கு, ஓவர்சீயர், பி.டி.ஓ., - ஏ.பி.டி.ஓ.,க்களும், பஞ்., செயலருக்கு ஒத்தாசையா இருந்திருக்கா...
''ஆலத்துார் யூனியன்ல இருக்கற, 39 பஞ்சாயத்துலயும் விசாரிச்சா, நிறைய முறைகேடுகள் அம்பலத்துக்கு வரும்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
ஒலித்த மொபைலை எடுத்த அண்ணாச்சி, ''சுந்தர்ராஜா... மதீனா, லதா, ஆலயமணி எல்லாரும் நாளைக்கு வந்துடுவாங்கல்லா...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் எழுந்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • A R J U N - sennai ,இந்தியா

  'ஆலத்துார் யூனியன்ல இருக்கற, 39 பஞ்சாயத்துலயும் விசாரிச்சா, ...மக்கள் னால பணியாளர்கள் எடுக்க வேண்டிய கணக்கை வீடுகளுக்கு படிவம் கொடுத்து மறுநாள் அந்த மாடி குடியிருப்போர் சங்க செயலரிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்,இதற்க்கு அரசு பயணப்படி,இகர செலவுகள் படி என கொட்டி கொடுக்கிறது... ஆக மக்கள் னால கணக்கெடுப்பு என்பது கண்துடைப்பு தான். சுகாதார துறை தூங்குகிறது,பின்பு கொரானா எண்ணிக்கை உயராமல் எப்படி இருக்கும்,படிவத்தில் எல்லாமே நன்கு உள்ளது என சொல்லிவிட்டு பின்பு மருத்துவமனையில் படுத்துக்கொள்கின்றனர்.

 • Aaaaa - Bbbbbb,இந்தியா

  இவர்கள் செய்த எல்லாமே முறைகேடான செயல்கள்தான்

 • chandkec - singapore,சிங்கப்பூர்

  இந்த ஊழல் தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது. நாடு nasamaga போயி rom a வருஷம் ஆச்சு..Ithu உங்களுக்கும் தெரியும்,அவர்களுக்கும் தெரியும்.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  இப்படி கூட்டணி போட்டுக் கொள்ளையடிப்பதில் மட்டும் ஜாதி, மதம் எந்த வேற்றுமையும் இருப்பதில்லையே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement