Advertisement

'டவுட' தனபாலு

Share


சினிமா இயக்குனர் பாரதிராஜா:
படிப்படியாக, அன்றாட வாழ்வை மீட்டு கொண்டிருக்கும் முதல்வருக்கு பாராட்டுகள். விதிகளை தளர்த்தி, சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் திணறி வருகின்றனர்; பலர் உணவுக்கே வழியின்றி சிரமப்படுகின்றனர். முதலீடு செய்த தயாரிப்பாளர்கள், வட்டி கட்ட முடியாமல் திணறுகின்றனர். எனவே, சினிமா படப்பிடிப்பிற்கும், அனுமதி அளிக்க வேண்டும்.'டவுட்' தனபாலு: நியாயம் தான், சினிமா துறை மட்டுமின்றி, எல்லா துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் தான். நீங்கள் சினிமாக்காரர் என்பதாலும், முதல்வருக்கு கடிதம் அனுப்பும் அளவுக்கு செல்வாக்கு பெற்றவர் என்பதாலும், இந்த கோரிக்கையை முன்வைக்கிறீர்கள். பிரதிநிதித்துவமே இல்லாத எத்தனையோ துறையினர் உள்ளனர், அவர்கள் கோரிக்கைகள் எல்லாம், எப்படி, யாரால் கேட்கப்பட போகிறதோ என்ற, 'டவுட்' நடுநிலையாளர்களுக்கு வருகிறதே!தி.மு.க., தலைவர், ஸ்டாலின்:
கொரோனா பரிசோதனைக்கான, பி.சி.ஆர்., கணக்கில் குளறுபடி உள்ளது. 2.71 லட்சம் கருவிகள் எங்கே போயின, கையிருப்பில் உள்ள கருவிகளின் எண்ணிக்கை தவறா அல்லது பரிசோதனை செய்ததாக கொடுக்கப்பட்ட எண்ணிக்கை தவறா... ஊரடங்கு காலத்தை, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் விளம்பரத்திற்காக வீணடிக்காமல், மக்களை காப்பாற்ற முதல்வர் முயற்சிக்க வேண்டும்.'டவுட்' தனபாலு: கருவிகள் கணக்கெடுப்புக்கு, அரசில் நிறைய அதிகாரிகள் இருக்கின்றனர். கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் நேரத்தில், இதெல்லாம் எதிர்க்கட்சித் தலைவரின் கடமையா என்ற, 'டவுட்' மக்களுக்கு வருகிறது. அ.தி.மு.க., அரசுக்கு, கொரோனா தாக்கம் ஒரு பக்கம் என்றால், உங்களின் குடைச்சல் மறுபக்கம் என, ஆளும் தரப்பில் பேசப்படுகிறதே!சென்னை மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ்
: சில தளர்வுகள் ஏற்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலானது. ஆனாலும், மக்கள், முகக் கவசம் அணிதல் போன்றவற்றை கடைப்பிடிப்பதில்லை. மக்கள் ஒத்துழைப்பு அளித்தால், 100 சதவீதம், நோயை கட்டுப்படுத்த முடியும்.


'டவுட்' தனபாலு: மக்களில் கொஞ்ச பேர், அசட்டையாக இருப்பதால் தான், சென்னையில் நாளுக்கு நாள், கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது என்பது, 'டவுட்' இல்லாமல் அனைவருக்கும் புரிகிறது. அத்தகையோருக்கு எப்போது தான், நல்ல புத்தி வரப் போகிறதோ என்ற, எதிர்பார்ப்பும் கூடியுள்ளது!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • karutthu - nainital,இந்தியா

    இப்போ சினிமாக்காரர்கள் பிழைப்புக்காக முதல்வரிடம் வருகிறார்கள் பாரதி ராஜா மூலமாக ........அன்று தமிழக அரசின் கொரோன ஒழிப்பு திட்டத்திற்கு ஒரு சிலர் தவிர யார் தாராளமாக நன்கொடை கொடுத்தனர் ....அப்போ இந்த பாரதி ராஜா விற்கு கொரோனா நிவாரண நிதிக்கு உதவ வேண்டும் என்று தோன்றவில்லையா ?

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இவர்கள் நலத்திட்டம் உதவி என்று ஆள் சேனை பரிவாரம் என்று அறுபது பேர் ஒருத்தர் மேல் ஒருத்தர் இடித்துக்கொண்டு போஸ் கொடுக்கும்போது மட்டும் தொற்று வராது வழி காட்டவேண்டியவர்கள் முதலில் ஒழுங்கைக் கடைப் பிடிக்கட்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement