Advertisement

'நாங்களா ஊறுகாய்?'

Share

'நாங்களா ஊறுகாய்?'


'அரசியல் கட்சி தலைவர்களுக்கு, தங்கள் காலத்திலேயே, தங்கள் வாரிசுகளையும் அரசியலில் பெரிய அளவில் உருவாக்கி பார்த்து விட வேண்டும் என்ற ஆசை உள்ளது;இதில், இவர் மட்டும் விதிவிலக்காக இருக்கப் போகிறாரா என்ன' என, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை பற்றி முணு முணுக்கின்றனர், அந்த மாநில மக்கள். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவரான சந்திரசேகர ராவின் மூத்த மகன் கே.டி.ராமா ராவ், தெலுங்கானா மாநிலத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளார். மகனை மட்டுமல்லாமல், மகள் கவிதாவையும் அரசியலில் வளர்த்து விட திட்டமிட்டார்.'மகன் ராமா ராவ், மாநில அரசியலுக்கு; மகள் கவிதா, மத்திய அரசியலுக்கு' என, திட்டம் வகுத்து களம் இறங்கினார். ஆனால், கடந்த லோக்சபா தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட்ட கவிதா, பா.ஜ., வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதை, சந்திரசேகர ராவால் ஜீரணிக்க முடியவில்லை. எப்படியாவது தன் மகளை மீண்டும் ஒரு தேர்தலில் போட்டியிட வைக்க வியூகம் வகுத்து வந்தார். அடுத்த சில வாரங்களில் நடக்கவுள்ள, மேல்சபை தேர்தலில் கவிதாவை போட்டியிட வைக்க முடிவு செய்து, வேட்பு மனுவும் தாக்கல் செய்ய வைத்து விட்டார். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி நிர்வாகிகளோ, 'மகன், மகள் என, தன் குடும்பத்தினருக்கே முக்கிய பதவிகளை கொடுத்தால், நாங்கள் எல்லாம் எதற்கு கட்சியில் இருக்க வேண்டும். இவரது வாரிசு அரசியலுக்கு நாங்களா ஊறுகாய்' என, புலம்புகின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement