Advertisement

'வெட்டுக்கிளி பிரியாணி வேணுமா?'

Share

'வெட்டுக்கிளி பிரியாணி வேணுமா?'

சேலம் மாவட்டம், ஏற்காடு வனப்பகுதியில், வெட்டுக்கிளிகள் கூட்டமாக ஊடுருவியதாக, வதந்தி பரவியது.இது குறித்து, சந்தியூர் ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர், ஸ்ரீதர் கூறுகையில், 'சேலத்தில், 'கிராஸ்ஹாப்பர்' எனும் பச்சை நிற வெட்டுக்கிளி உள்ளது. அது, புழு, பூச்சியை மட்டும் உட்கொள்வதால், விவசாயிகளின் நண்பன் என்றும் சொல்லலாம். பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட, 'லோக்கஸ்ட்' இன வெட்டுக்கிளி, தமிழகம் மட்டுமல்ல, தென் மாநிலங்கள் எதிலும் நுழையாது' என்றார்.குறிப்பெடுத்த இளம் நிருபர் ஒருவர், 'வெட்டுக்கிளி பிரியாணி, சூப்பரா இருக்குதாம்ல... அதையும், சாப்பிட்டு பழகணும் பா...' என்றார்.அருகிலிருந்த மூத்த நிருபர், 'ஏற்கனவே, கொரோனா வைரசால, கதிகலங்கி நிக்கிறோம்... இதுல, லோக்கஸ்ட் வெட்டுக்கிளி பிரியாணி வேணுமா... கண்டதைச் சாப்பிட்டு, புதுசா வைரஸ் எதையும் பரப்பாதே...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    உலகில் ஒரு உயிரினம் இருக்க கூடாதே வறுக்கவா, பொறிக்கவா, வைக்கவா என்று பறப்பதால்தான் அவையும் விதவிதமான நோய்களை கொடுக்கின்றன

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement