Advertisement

'அரசியல்வாதிகள் காட்டில் மழை!'

Share

'அரசியல்வாதிகள் காட்டில் மழை!'


மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலரும், எம்.எல்.ஏ.,வுமான, ராஜன் செல்லப்பா, நிவாரணம் வழங்கினார்.பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'தி.மு.க., சார்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, ஆதாரம் இல்லை; நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அ.தி.மு.க., அரசுக்கு, மடியில் கனமில்லை; வழியில் எங்களுக்கு பயமில்லை' என்றார்.முகக் கவசம் அணிந்த இளம் நிருபர் ஒருவர், 'வரலாற்றிலேயே முதல் முறையாக, தலைமைச் செயலகத்தில், 'ரெய்டு' நடந்தது, தமிழகத்தில் தானே பா... ராஜன் செல்லப்பாவிற்கு, அதெல்லாம் மறந்துருச்சா...' என்றார்.அருகிலிருந்த மூத்த நிருபர், 'அந்த ரெய்டு விஷயம், மக்களுக்கு மறந்துருச்சே... மறதி இருக்கும் வரை, அரசியல்வாதிகள் காட்டில் மழை பெய்யத் தான் செய்யும்...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement