Advertisement

'பாவம்... விட்டுடுங்க!'

Share

'பாவம்... விட்டுடுங்க!'



'கோவை மக்கள் சேவை மையம்' சார்பில், முடி திருத்தும் தொழிலாளர்கள், சிறு கோவில் பூசாரிகள் உட்பட, 200 பேருக்கு, 'மோடி கிட்' வழங்கும் நிகழ்ச்சி, காந்திபுரத்தில் நடந்தது. தமிழகம் மற்றும் கேரள மாநில, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு செயலர், நாகராஜ் பங்கேற்றார்.பா.ஜ., மாநில பொதுச் செயலர், வானதி சீனிவாசன் கூறுகையில், 'தாழ்த்தப்பட்ட மக்களை, அவதுாறாக பேசிய, தி.மு.க., அமைப்பு செயலர் பாரதி, கைது செய்யப்பட்டுள்ளார். இதை, தி.மு.க.,வுக்கும், அதன் பேச்சாளர்களுக்கும் எச்சரிக்கை மணியாக பார்க்கிறோம்' என்றார்.அங்கிருந்த நிருபர் ஒருவர், 'சில சில்லரை கட்சி தலைவர்கள் எல்லாம், பிரதமரை அவதுாறா பேசுறாங்க... சட்டம், அவங்களை ஒண்ணும் செய்யலையே...' என்றார்.அருகிலிருந்த மூத்த நிருபர், 'கட்சி நடத்த வேணாமா... பாவம் விட்டுடுங்க...' எனக் கூறிச் சிரித்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement