Advertisement

சுவாமி தரிசனத்துக்கும், 'டோக்கன்!'

Share

சுவாமி தரிசனத்துக்கும், 'டோக்கன்!'



'தமிழகத்தில், கோவில்களைத் திறக்க வேண்டும்' என, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் முன், ஹிந்து முன்னணியினர், முகக் கவசம் அணிந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஹிந்து முன்னணி மாநில துணைத் தலைவர், ஜெயகுமார் கூறுகையில், 'கோவில்களை திறக்காவிட்டால், மே, 26ல் தமிழகம் முழுதும் உள்ள கோவில்கள் முன், தோப்புக்கரணம் போடும்
போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றார்.இதை குறிப்பெடுத்த இளம்நிருபர் ஒருவர், 'டாஸ்மாக் கடையை திறக்க, அரசு போராடியது... கோவிலைத் திறக்க, மக்கள் போராடுறாங்க...
என்னங்க நடக்குது நாட்டுல...' என, வருத்தப்பட்டார்.அருகிலிருந்த மூத்த நிருபர், 'சுவாமி தரிசனத்துக்கும், கலர் கலரா, 'டோக்கன்' வினியோகிக்கலாம்...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement