Advertisement

நாடகம் நடக்குது!

Share

நாடகம் நடக்குது!


திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி காந்திநகர் பகுதியில், அ.தி.மு.க., அவைத் தலைவர், குப்புசாமி தலைமையில், கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்தது. இதில், திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன் பங்கேற்று, பொதுமக்களுக்கு, கப சுர குடிநீர் வழங்கினார்.பங்கேற்ற பெண்கள் சிலர், 'அரிசி, காய்கறி நிவாரணம் பை கொடுக்கறாங்கன்னு சொன்னாங்க... இங்கே வந்தா, கஷாயம் கொடுக்குறீங்களே...' என, எம்.எல்.ஏ.,விடம் கேட்டனர். உடனே, எம்.எல்.ஏ., அருகிலிருந்த குப்புசாமியிடம், 'இந்த பெண்களின் பெயர்களை எழுதிக்கோங்கோ... ரெண்டு மூணு நாள்ல, நிவாரண பை கொடுக்கலாம்' என்றார். அவரும், சில பெண்களின் பெயரை, ஒரு தாளில் எழுதினார்.
இதை பார்த்த நிருபர் ஒருவர், 'தேர்தல் பிரசார கூட்டத்துக்கு வந்த மாதிரி, இந்த பெண்கள் அலுத்துக்கிறாங்க... எல்லாருக்கும், நிவாரணம் கொடுக்கப்போற மாதிரி, அரசியல்வாதிகளும், 'பில்டப்' கொடுக்குறாங்க... நாடகமப்பா, நாடகம்...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement