Advertisement

'தெரிஞ்சாலும் சொல்ல மாட்டோம்ல!'

Share

'தெரிஞ்சாலும் சொல்ல மாட்டோம்ல!'

காங்கிரசைச் சேர்ந்த, எம்.பி., செல்லகுமார், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், ஆட்டோ டிரைவர்கள், சலவை தொழிலாளர்களுக்கு ஊரடங்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.அப்போது அவர் கூறுகையில், 'தமிழகத்திலேயே, அதிக இளம் விதவைகள் வாழ்வது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் என்ற புள்ளி விபரம் கிடைத்துள்ளது. அதற்கு காரணம், மது என்ற அரக்கன் தான்' என்றார்.இதைக் கேட்ட நிருபர், 'இவருக்கு கிடைச்ச புள்ளி விபரத்துல, தமிழகத்துல, மதுக்கடைகளை திறந்தது யாரு, மதுவை தயாரிக்கிறது யாரு, அவங்களுக்கு, ஆதரவு கொடுக்குறது யாருன்னு போன்ற விபரங்கள் இல்லையா?' என்றார்.
அருகிலிருந்த மூத்த நிருபர், 'தெரிஞ்சாலும் சொல்ல மாட்டோம்ல...' எனக் கிண்டலாகச் சிரிக்க, சுற்றி இருந்தவர்களும் சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • baala - coimbatore,இந்தியா

    எவனோ ஒருவன் மது தொழிற்சாலை வைத்து இருந்தால் இவர்கள் ஏன் வாங்க வேண்டும், இவன் வாங்கவில்லை என்றால் அவன் உற்பத்தி செய்ய முடியுமா? அதை ஏன் ஒருவரும் சொல்லுவதில்லை/ வரும் கமிஷன் போய்விடும் அதனால் தான் அதை பற்றி சொல்லுவதில்லை

  • Bhaskaran - Chennai,இந்தியா

    நீ ஊர்லதான் இருக்கியா .

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அதையெல்லாம் சொல்லிவிட்டு கூட்டணிக்கே வேட்டு வைக்கத் துணிவாரா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement