Advertisement

'சிஸ்டம் சரியில்லே!'

Share



மதுரை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், 'கொரோனா' கட்டுப்பாட்டு அறையை, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் சமீபத்தில் ஆய்வு செய்தார்.பின், பேட்டியளித்த அவரிடம், கொரோனா தடுப்பு நடவடிக்கையை, எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்வது குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆவேசமடைந்த அமைச்சர், 'இந்தியாவில், தமிழகத்தில் மட்டும், அதிகளவு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தரமான சிகிச்சைக்கு பின், குணமடைவோரும் அதிகமாக உள்ளனர். 'கொரோனா தொற்றை தடுப்பதில், அதிகாரிகள் சிறப்பாக செயல்படுகின்றனர். தமிழக அரசின் நடவடிக்கையை, ஊடகங்கள் பாராட்டுகின்றன. உங்கள் உள்ளமும் பாராட்டுகிறது; ஆனால் உதடு, பாராட்ட மறுக்கிறது' என்றார்.

இதைக் கேட்ட, மூத்த நிருபர் ஒருவர், 'ஊரடங்குன்னு சொல்வீங்க... ஆனா, 'டாஸ்மாக்'லேர்ந்து எல்லாத்தையும் தொறப்பீங்க... சிஸ்டம் சரியில்லே...' என முணுமுணுக்க, மற்றவர்கள் ஆமோதித்து தலையசைத்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    டாஸ்மாக் திருவிழாவால் பரவும் தொற்றைக் கணக்கு காட்டினால் கோர்ட் கூட தலையிட்டு, முதலுக்கே மோசமாகிவிடும். சும்மா 'தமிழகம் உயர்கிறது, வழி காட்டுகிறது என்று பீற்றிக் கொள்பவர்கள், ராயபுரம், திருவிக நகரெல்லாம் என் சீல் வைக்கப்பட்டதென்று கொஞ்சம் விளக்குவார்களா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement