Advertisement

எல்லாத்தையும் குடுக்க முடியுமா?

Share

''தட்டுனா தான் கதவு திறக்கும்... கேட்டா தான் கிடைக்கும்கிறது சரியாதான் இருக்குதுங்க...'' என, குப்பண்ணா வீட்டு முற்றத்தில், கச்சேரியை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.

''யாரு, எங்க போய் என்னத்தை கேட்டாவ வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''கொரோனா ஊரடங்கால பாதிக்கப்பட்டிருக்கிற, அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படும்னு அரசு அறிவிச்சதுங்க... ஆனா, ஒரு மாசமாகியும், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்கள்ல, இந்த உதவித்தொகையை சரியா வழங்கலைங்க..௦.''ஏமாந்து போன உறுப்பினர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரியத்தின், 'மாஜி' தலைவர் சேமநாராயணனிடம் புகார் சொல்லியிருக்காங்க...''அவரும், தொழிலாளர்கள் நல வாரிய உயர் அதிகாரியை சந்திச்சு, குறைகளை தெரிவிச்சாராம்... உயர் அதிகாரி, 'முதல் கட்டமா, கட்டட தொழிலாளர்களுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் கொடுக்கிறோம்... ''அடுத்த கட்டமா, மண்பாண்ட, சலவை, முடிதிருத்தும் உட்பட, 14 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, நிவராண உதவி வழங்கப்படும்'னு, உறுதி அளிச்சிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி
.''நல வாரிய தொழிலாளர்கள் சம்பந்தமா என்கிட்டயும ஒரு தகவல் இருக்கு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்.''திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகாவுல, அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்களை கணக்கெடுத்து, பட்டியல் அனுப்ப, கலெக்டர் உத்தரவு போட்டாரு...''வருவாய் துறை அலுவலர்கள் கிராமம், கிராமமாக நேரடியாக போய் பயனாளிகள் பெயர், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு விபரங்களை சேகரிச்சாங்க பா...''ஆனா, ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் எல்லாருமே, 'எங்க அனுமதியில்லாம லிஸ்ட் எடுக்கக்கூடாது... நாங்க தர்ற பெயர்களை மட்டும் தான் நிவாரண தொகைக்கு பரிந்துரை செய்யணும்'னு மிரட்டுறாங்கப்பா... ''ஒரு சில ஊராட்சியில, அதிகாரிகளை ஊருக்குள்ளயே விடாம, வாக்குவாதம் பண்ணி துரத்தி அடிக்கிறாங்க... உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது போலீசிலும் புகார் கொடுக்க முடியாம, வருவாய் துறை ஊழியர்கள் தவிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''எல்லாத்தையும் வாரி குடுக்க முடியுமான்னு கேக்காரு வே...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அண்ணாச்சி.

''யாரு ஓய் இப்படி...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவித்த, 'ஒன்றிணைவோம் வா' திட்டத்துல, உதவிக்கு, மொபைல் போன் எண் அறிவிச்சிருக்காவ... நாமக்கல் மேற்கு மாவட்டத்துக்கு வர்ற போன் கால்கள்ல, 25 சதவீதம் பேருக்கு மட்டுமே, அதுவம் பெயரளவுக்கு மாவட்ட முக்கிய புள்ளி உதவி செய்தாரு வே...''மற்ற அழைப்புகளை, வசதியானவங்க, பணக்காரங்கன்னு தட்டிக்கழிச்சிடுதாரு... இது சம்பந்தமா, தனக்கு நெருங்கிய கட்சி நிர்வாகிகளிடம் முக்கிய புள்ளி மனசு விட்டு பேசியிருக்காரு வே...''அப்ப, 'ஏற்கனவே மாவட்டத்துல, முக்கிய புள்ளியா இருந்த காந்திசெல்வன், கட்சிக்கு கோடிக்கணக்குல செலவு பண்ணியிருக்காரு... எம்.பி., தேர்தல்லயும் பல கோடிகளை செலவழிச்சாரு... ''அவரையே, தலைமை கழற்றி விட்டுடுச்சு... அதனால, கட்சி தலைமையை நம்பி, நம்ம கையில இருக்கிறதையும் வாரி விட்டுட்டா, அடுத்த முறை இந்த மாதிரி இக்கட்டுகள் வர்றப்ப, நாமே மத்தவங்களிடம் போய் கையேந்துற நிலைக்கு போயிடுவோம்'னு புலம்பியிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி

.நண்பர்கள் தங்கள் வீட்டை நோக்கி நடையைக் கட்டினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா

    தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க ஒரு தொகை நிவாரண உதவிகள் பெற ஒரு தொகை என லஞ்சம் பெற்றுக்கொண்டு அந்த தொழில்களில் ஈடுபடாதவர்க்கெல்லாம் நிவாரண உதவிகள் வழங்கி அரசு பணத்தை சூறையாடச் செய்கின்றனர் முதியோர் மற்றும் இதர ஓய்வூதியங்களில் செய்தது போல.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    'அண்டை வீட்டுக்காரா பாம்பை பிடி' என்பதுபோல், கட்சித்தலைமையிடம் உள்ளதில் ஒரு சதவீதம் கொடுத்தாலே தமிழகம் முழுதுக்குமே பசி போக்கலாம் நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லாமே இவர்களைப்போல் நாலு தலைமுறையாக சேர்த்தவர்களா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement