Advertisement

மகத்தான மதுரை ஏரியல் போட்டோகிராபி.

Share

இந்த நேரம் சித்திரை திருவிழா காரணமாக மதுரை குலுங்கிக்கொண்டு இருக்கும்.
சித்திரை வீதிகளில் சுவாமியும்-மீனாட்சியும் விதம் விதமான வாகனங்களில் வரும் அழகை பார்க்க எந்தப் பக்கம் பார்த்தாலும் பக்தர்கள் திரண்டு நிற்பர்.வைகை ஆற்றின் இந்தப் பக்கம் மீனாட்சி கோவில் திருவிழா ஒரு பக்கம் களைகட்டிக் கொண்டு இருக்கும், வைகை ஆற்றுக்கு அந்தப் பக்கம் அழகர் கோவிலில் இருந்து அழகர் புறப்பாட்டுக்கான திருவிழா பட்டைய கிளப்பிக் கொண்டு இருக்கும்.நட்பும் உறவுமாக ஊர் நிரம்பியிருக்க எங்கு இருந்துதான் பெய்யுமோ திருவிழா நேரத்தில் கோடை மழை பெய்து பக்தர்களின் மனதையும் ஊரையும் குளிர்வித்துவிடும்.ஒரு பக்கம் பானகம், இன்னோரு பக்கம் நீர்மோர், அன்னதானம், விசிறி தானம் என்று மதுரை மக்கள் தங்களால் முடிந்தளவு சக மனிதர்களுக்கு வாரி வழங்கிக் கொண்டு இருப்பர். அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் விரதமிருக்கும் அழகர் சாமிகளின் விசேட ஆடையை வடிவமைப்பதற்காக புதுமண்டபத்தில் தையல் மிஷின்கள் ஒடிக்கொண்டே இருக்கும்.அந்த ஆடையை அணிந்து கொண்டு கால்களில் சலங்கை சத்தம் கிளம்ப பக்தர்கள் சாமியாடி வரும் அழகுக்கு ஈடாக எதையும் சொல்லமுடியாது.
‛வாரரு வாரரு அழகர் வாரரு' பாட்டு தெருவிற்கு தெரு ஒலிக்க அழகர் மலையை விட்டு கிளம்பி ஒவ்வொரு மண்டகப்படியகாக தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி தங்க குதிரை வாகனத்தில் பல லட்சம் பக்தர்கள் மத்தியில் வைகை ஆற்றில் எழுந்தருளும் காட்சி கண்கொள்ளாக்காட்சி.நீண்ட நெடுங்காலமாக நடந்துவரும் உலகம் போற்றும் பிரம்மாண்டமாக மதுரை சித்திரை திருவிழா கொரோனா காரணமாக இந்த வருடம் இல்லை என்பதை என்னும் போது மனதில் தாளமுடியாத வலி அதிலும் மதுரைக்காரன் என்ற முறையில் கொஞ்சம் கூடுதல் வலி.
ஆனால் வேறு வழியில்லை
இந்த சூழ்நிலையில் உறங்கிக்கிடக்கும், பீதியில் உறைந்து கிடக்கும் மதுரையின் ஏரியல் போட்டோகிராபி கொஞ்சம் பார்க்கலாம்.
மீனாட்சி அம்மன் கோவில்,தெப்பக்குளம்,திருப்பரங்குன்றம் கோவில்,கலெக்டர் அலுவலகம்,மகால் மற்றும் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் ஆகிய இடங்கள் அணிவகுத்துள்ளன.
படங்கள் உதவி:மதுரை கண்ணன்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Shekar Raghavan - muscat,ஓமன்

    அகம் ப்ரம்ஹஸ்மி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement