dinamalar telegram
Advertisement

கட்டுண்டோம்!

Share

இந்திய ஜனநாயக வரலாற்றில் காணாத வகையில், இப்பெரிய தேசம், ஊரடங்கு என்னும்
சங்கிலியால் பிணைக்கப்பட்டு, கட்டுண்டுகிடக்கிறது.

ஆனாலும், தமிழகம் உட்பட சில மாநிலங்களில், 10 சதவீத செயலாக்கம் துவங்கி விட்டது.
கேரளத்தில் பாதிப்பு வேகம் காட்டாத கொரோனாவை, சீரியசாக கருதாமல், உணவகங்களை திறந்து விட்டு, பின் மத்திய அரசு கேள்வி கேட்டதால், அவற்றை மூடியது, மடமை.

'கொரோனா'விற்கு இன்று அமெரிக்கா அஞ்சுகிறது. காரணம், சாவு எண்ணிக்கை அதிகம்.
அதுமட்டுமல்ல, கொரோனா வைரசை சீனா பரப்பியது என்ற அதிபர் டிரம்ப் வாதம்,அழுத்தமானது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ், சீனாவின் ஆதரவாளர் என்ற புகாருக்கு, சிலபின்னணிகளும் உள்ளன.ஆகவே, உலக சுகாதார நிறுவனத்துக்கு, நிதி
தருவதையும் நிறுத்தி விட்டார். அது மட்டுமல்ல, இனி டிரம்ப், அடுத்த முறை அதிபராக தேர்வு செய்யப்படுவது சந்தேகமே.

அதைவிட, அமெரிக்காவில், கொரோனா பறித்த உயிர் எண்ணிக்கை, 17 ஆயிரத்தை தொடப் போகிறது. வைரஸ் உடலில், 14 நாள் தங்குமா அல்லது 31 நாளா என்ற கேள்விக்கு விடை இல்லை.ஆகவே கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர் அல்லது எவ்வித பாதிப்பும் இல்லாத ஒருவர் என்ற வித்தியாசம் கிடையாது. அப்படி எனில், இந்த வைரஸ் மிரட்டல் ஓயாது.
மேலும் என்று இந்த வைரசை தடுக்க தடுப்பூசி வருகிறதோ, அதுவரை இந்த நோய்த்தொற்று, தற்போது சீனாவின் வூஹானில் இருந்து புறப்பட்ட மாதிரி கிளம்பலாம்.

மக்கள் மனதில் இந்த வைரஸ் ஏற்படுத்திய பயத்துடன், மக்களைக் காக்கும் பொறுப்பில் உள்ள டாக்டர்கள், நர்சுகள் மற்றும் காவலரை தாக்கிய சில சம்பவங்கள், அவமானகரமானது.
மேலும் நம் மாநிலத்தில் அம்பத்துாரில், இத்தொற்று பாதித்து இறந்த, டாக்டர் ஒருவரை
இடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்த நம் தமிழர் செயல் கண்டிக்கத்தக்கது.

இறந்தவர் உடலில் இருந்து, இந்த நோய்த்தொற்று பரவாது என்பதை யார் புரிய வைப்பது?
இவை ஒருபுறம் இருக்க, எப்படி மக்களை படிப்படியாக ஊரடங்கில் இருந்து மீட்பது என்பதை, மத்திய அரசு சிந்தித்திருப்பது கவனிக்கத் தக்கது.மே, 3ம் தேதிக்கு பின், எந்தப் பணிகள் சிறிதளவு செயல்படும் என்பதை மத்திய அரசு முடிவெடுப்பது நல்லது.


இதில், 'பெடரலிசம்' என்ற பேச்சு எதற்கு? மே.வங்க மம்தா, அவசரப்பட்டு இனிப்பு விற்பனை உட்பட சில உணவகங்களை திறந்து, பின் மூடியுள்ளார். கேரளாவிலும் உணவகங்கள் திறந்து, பின் ஒரே நாளில் மூடப்பட்டன.நம் நாட்டில், மொத்தம், 130 கோடி மக்களுக்கு, 12 ஆயிரம் டாக்டர்கள் என்பது, விகிதாசாரப்படி குறைவு. ஆனால் அவர்கள் இந்த,30 நாட்களில்
பணியாற்றிய விதம் சிறப்பானது.அத்துடன் அடுத்த சில நாட்களுக்கு பின், இந்த வைரஸ் வேகம் குறையும் வரை, சமூக இடைவெளி மட்டும் அல்ல, 'லாக் டவுன்' ஏற்படுத்திய மனப்பாதிப்புகளை கடந்து வாழ, அனைவரும் பழக வேண்டும்.

பண வருவாய் வற்றி வரும்போது, அடுத்த கட்ட சமூக பாதிப்புகளை தடுக்க, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். மீண்டும் இயல்பு வாழ்வு தேவை என்பதை, மாநில அரசுகள் மீட்டெடுப்பதில் முனைய வேண்டும். அதில், உண்மையான, 'பெடரலிசம்' வாழும்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement