Advertisement

இளையான்குடி வாலிபர் சிங்கப்பூரில் மரணம்

Share

இளையான்குடி:இளையான்குடி மேலாயூரைச் சேர்ந்த சுப்பையா மகன் சண்முகநாதன் 32. இவர் கடந்த 12 வருடங்களாக சிங்கப்பூரில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார்.


கடந்த 7ந் தேதி சண்முகநாதனுக்கு இருமல்,சளி இருந்ததால் அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றார்.மருத்துவர்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். அறைக்கு சென்றவர் அடுத்த நாள் காலை இறந்தார். அங்கிருந்தவர்கள் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

சண்முகநாதனின் உறவினர்கள் கூறுகையில், பரிசோதனைக்கு சென்றவர் அடுத்த நாள் இறந்து விட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். அங்குள்ள சுகாதார துறை அதிகாரிகள் சண்முகநாதன் இதயநோயால் இறந்து விட்டார் என அறிக்கை வெளியிட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துஉள்ளது.அவரது உடலை இந்தியாவிற்கு அனுப்ப மறுத்து வருகின்றனர்.


சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் மற்றும் இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் சண்முகநாதனின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement