dinamalar telegram
Advertisement

காத்திருங்கள்...!

Share

தமிழகம் சந்தித்து வரும், 'கொரோனா' அபாயம், அண்டை மாநிலங்களை விட சற்று குறைவு என்றாலும், இந்த நோய்க்கு எதிரான போரை நடத்த, 9,000 கோடி ரூபாய் தேவை என, தமிழக முதல்வர், பிரதமரிடம் கோரியுள்ளார்.இன்றைய சூழ்நிலையில் மொத்த வளர்ச்சி எவ்வளவு இருக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில், இதைப் பற்றிய சிந்தனையை விட, அடுத்த, 15 நாட்கள் கழித்து, உலக நாடுகளில் எதில், இந்த நோய் தொற்று தீவிரமாகி பலரைத், 'தனித்திருக்க' வைத்தது என்ற தகவல் வரும்.கடந்த ஆண்டு டிசம்பர் கடைசியில் துவங்கி, கிட்டத்தட்ட, 70 நாளில், 199 நாடுகள் பீதியில் சிக்கி விட்டன. இந்த நோய்த் தொற்றைப் பரப்பிய சீனாவை விட, ஐரோப்பிய நாடுகள் படும் துயரம் அதிகம்.கொரோனா பாதித்தவர்கள் அல்லது அறிகுறிகள் உடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட தகவலில், ஒரு லட்சம் பேர் கண்காணிப்பில் உள்ளனர் என்ற தமிழக அரசின் தகவல் சற்று நெருடலானது.பொதுவாக, கை அலம்புதல், வாய் கொப்பளித்தல், பாதம் வரை காலை அலம்பும் செயல், அறநெறிப் பாடல்களில் காணப்படும் தகவல் இதை, 'ஆசாரம்' அல்லது 'மதநெறி' என்று ஒதுக்கிய, கடந்த, 20 ஆண்டு கால, வாழ்வு நெறி தவறானது. இன்று, அதை சிந்தித்தால் வியப்பு வரும்.நுாறாண்டுகளுக்கு முன், நம் மக்கள் தொகை குறைவு. நுகர்வு, தேவைகள் இல்லாத வாழ்வு நெறி. ஆனால், உலக நாடுகளுடன் போட்டி போட்டு, வாழ்வில் பெரிய மாற்றங்கள் அடைந்த நாம், இன்றுள்ள சொந்த, பந்தங்களை, விரிவடைந்த நட்பு வட்டங்களைத் தாண்டி, 'தனித்திரு' அல்லது 'விழித்திரு' என்பது ஏற்க இயலாத கருத்து.அதிக டூ - வீலர், நான்கு சக்கர வாகனங்கள், பொதுத் துறை வாகனப் போக்குவரத்து, அத்துடன் ரயில், விமானம், என்ற, பன்முக வசதிகளின்றி முடங்கி விட்டோம்.நாடு சுதந்திரம் பெற்ற காலத்தைய முதல் பிரதமர், ஜவஹர்லால் நேரு, 'அவசர நிலை என்ற ஆதிக்க உணர்வுடன் வரலாற்றில் நின்ற இந்திரா, காங்கிரஸ் என்ற தனிப்பெரும் கட்சியை தவிர இந்தியாவை ஆள முடியாது என்பதை, 'கூட்டணி தர்மம்' என்ற புதிய நுணுக்கத்தால் பிரதமராக நின்ற வாஜ்பாய் வரிசையில், 'கொரோனா லாக் டவுன்' என்ற முறையில், 130 கோடி மக்களை நடமாட முடியாதபடி செய்த பிரதமர், மோடி இடம் பெறுவார்.தவிரவும், இந்தியாவில் உள்ள பெரிய, சிறிய நகரங்களில், மக்கள் வாழும் நெருக்கம் மிக அதிகம். 1 சதுர கி.மீ., பரப்பில், 400க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களின் அன்றாட வாழ்வு என்பது, நெருக்கி அடித்து அல்லது மற்றவர்களுடன் மோதி, முட்டி முண்டியடித்து வாழும் நிலை உள்ளது.அந்த சூழ்நிலையில், 'சார்க்' அமைப்புகளில், நம் நாடு பெரிய நாடு: 'ஜி - 20' அமைப்புகளில் உள்ள நாடுகளிலும் நம் மக்கள் தொகை அதிகம். சீனா எல்லாவற்றையும் விட அதிக மக்கள் தொகை கொண்டிருப்பினும், அதன் அரசு, 'இரும்புத்திரை' கொண்டது.அங்கு ஒரு மாவட்டத்தை விட்டு, அடுத்த மாவட்டத்துக்கு செல்ல அதிக கெடுபிடிகள் உண்டு. அதனால் இந்த கொரோனா வைரசை, முதலில் பாதிப்பு என்றிருந்த பின்னும், சீனா அதை வெளியிடவில்லை. உதாரணத்திற்கு, அமெரிக்காவை பாருங்கள்.இந்த நோய்த் தொற்று, கலிபோர்னியா, வாஷிங்டனில் பரவியதை ஒப்புக் கொள்கிறது. அதேபோல பிரிட்டன் இளவரசர், சார்லசுக்கும் கொரோனா பீதி வந்த தகவல் வெளியாகி உள்ளது.ஆகவே, ஏப்., 1ம் தேதி, 'முட்டாள் தினம்' என்பதை விட, நம் நாடு கொரோனா அதிவேக பரவுதலை, 'லாக் டவுன்' மூலம் குறைந்த இறப்புடன், அந்த நாளை, 'கெட்டிக்காரர் நாள்' ஆக்கிவிடுமா என்பதே, இன்றைய கேள்வி.இன்று, 'பொருளாதார தேக்கம்' என்பது முடிந்து போன விஷயம். நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவை மேற்கொண்ட லட்சக்கணக்கான கோடி அறிவிப்புகள், தாராளமான பணப் புழக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதும் அடுத்த வாரம் தெரியும்.இதில், வளர்ந்த மாநிலங்களில், மஹாராஷ்டிரா, கர்நாடகம் ஆகியவற்றின் உற்பத்தி திறன் மங்கும். அதேபோல தமிழகமும் பாதிக்கப்படும்.ஆகவே, கொரோனா பீதி குறைந்து பொருளாதார உற்பத்தி இயல்பு நிலைக்கு வர, இன்னமும் நாம், மூன்று மாதங்கள் காத்திருக்க நேரிடும்.இதைத் தவிர வேறு எந்த பார்வையும், நாட்டுமக்களுக்கு அவசியமா என்பதை நினைத்தால், அதிக குழப்பமே மிஞ்சும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement