Advertisement

'எப்படி உசுப்பு ஏத்துறாரு பாருங்க!'


'எப்படி உசுப்பு ஏத்துறாரு பாருங்க!'

வேலுார் மாவட்ட, தி.மு.க., உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தி.மு.க., பொருளாளர் துரைமுருகன், 'உட்கட்சி தேர்தலில் குறைபாடு இருப்பது, உண்மை தான். முன் போல, திருமண மண்டபங்களில் தேர்தல் நடக்காது. அந்தந்த கிராமங்களுக்கு சென்று, தேர்தல் நடத்தப்படும். இதை மீறுவோரை, 'முரசொலி' நாளிதழில், 'கட்டம்' கட்டிடுவேன். வரும் நவம்பரில், சட்டசபை தேர்தல் வரலாம். அதற்கான திட்டத்துடன், அ.தி.மு.க., காய் நகர்த்தி வருகிறது. எனவே, கொஞ்சம்கூட சோம்பல் இல்லாமல், தி.மு.க.,வினர் கட்சிப் பணிகளை ஆற்ற வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது, ஸ்டாலின் துாங்கியிருந்தால், இந்த அளவுக்கு, தி.மு.க., வெற்றி பெற்றிருக்க முடியாது. வேலுார் மாநகராட்சியை கைப்பற்றியே, தீர வேண்டும். இல்லையென்றால், தி.மு.க.,காரன் என சொல்வதற்கு, நமக்கு அருகதை கிடையாது' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'தி.மு.க., பொருளாளர், தன் சொந்த ஊர்லயே, இப்படி மிரட்டி தான், ஓட்டு வாங்கணும் போல...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement