Advertisement

வாசவி கிளப் சிறப்பு பூஜை

சங்கராபுரம்:பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டி சங்கராபுரம் வாசவி கிளப் வனிதா சார்பில் சிறப்பு பூஜைநடந்தது.

சங்கராபுரம் பகுதியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி சங்கராபுரம் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள ஹயக்கிரீவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.வாசவி கிளப் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயலர் பிரபாகரன், பொருளாளர் சம்பத், வனிதா கிளப் தலைவர் சித்ரா, செயலர் சுமதி, பொருளாளர் புவனேஸ்வரி, முன்னாள் தலைவர் தீபா சுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.பூஜையில் பங்கேற்ற பொது தேர்வு எழுதும் 100 மாணவர்களுக்கு பூஜிக்கப்பட்ட பேடு, பேனா, பென்சில் வழங்கப்பட்டது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement