Advertisement

'பா.ஜ.,வின் பிரசார பீரங்கியாக உள்ளாரே!'

மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டசபை தொகுதியில் நடந்த, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில், அமைச்சர், ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்.அப்போது, அவரிடம், 'குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக, முதல்வர் மற்றும் உங்கள் மீதும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளாரே' என நிருபர்கள் கேள்வி கேட்டனர். ஆவேசமுற்ற உதயகுமார், 'குடியுரிமை சட்ட திருத்தத்தால் பாதிக்கப்பட்டோர் குறித்து தெரிவிக்கலாம் என, சட்டசபையில் முதல்வர், இ.பி.எஸ்., கூறினார். அதற்கு ஸ்டாலினால் பதிலளிக்க முடியவில்லை. என்.பி.ஆர்., - தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. எனவே, எல்லாவற்றிலும் குறை, குற்றம் சொல்வதே, ஸ்டாலினின் குறிக்கோளாக உள்ளது. தற்போதும் சொல்கிறேன், குடியுரிமை சட்ட திருத்தம், என்.பி.ஆர்., ஆகியவற்றால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'மத்திய அரசுக்கு, பா.ஜ.,வினரை விட, இவரை போன்ற அமைச்சர்கள் தான் பிரசார பீரங்கியா இருக்காங்க...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் தலையசைத்து அதை ஆமோதித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement