Advertisement

திராவிட கட்சிகள் பிடியிலிருந்து விடுபடணும்

ந.தேவதாஸ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு எல்லாம், தி.மு.க., ஆட்சி காலத்தில் விதைக்கப்பட்ட பார்த்தீனிய செடிகள்' என்கிறார், ஒரு அமைச்சர்.

அதே போல், 'ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு அனுமதி வழங்கியது, முந்தைய, தி.மு.க., ஆட்சியில் தான்; அவர்கள் செய்த பாவத்தை, தற்போது, நாங்கள் தான் சுமக்கிறோம்' என்கிறார், மற்றொரு அமைச்சர்.ஐம்பது ஆண்டுகளாக, தமிழகத்தை ஆண்டு வரும், இரு திராவிட கட்சிகளும், ஒருவர் மீது ஒருவர் புழுதி வாரி இறைப்பதையே, கொள்கையாக கொண்டுள்ளனர்.காலையில், தினசரி நாளிதழ்களை புரட்டினால், பக்கத்திற்கு பக்கம், பாலியல் பலாத்கார சம்பவங்கள், கொலை, கொள்ளை செய்திகள், மக்களை பயமுறுத்துகின்றன. பட்டப்பகலிலேயே, செயின் பறிப்பு சம்பவங்கள் நடக்கின்றன.இந்த லட்சணத்தில், 'தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது' என, தமிழக முதல்வர் இ.பி.எஸ்., தம்பட்டம் அடித்து கொள்கிறார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஉயிரோடு இருந்த போது வாயை திறக்காத, அமைச்சர்கள் எல்லாம், இஷ்டத்திற்கு, தினமும் ஒரு அறிக்கையை விட்டு வருகின்றனர். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வனத்துறை அமைச்சர் சீனிவாசன், கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு போன்றோர், இதில் அடக்கம்.தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி அமைந்து, ஒன்பது ஆண்டுகளாகிறது. திராவிட கட்சிகளின் ஆட்சி பிடியில் இருந்து, தமிழன் அடியோடு விடுபட வேண்டும். அப்படி விடுபட வேண்டுமெனில், தமிழர்களின் நன்மதிப்பை பெற்றிருக்கும், ஒரு நல்ல மனிதரை அரசியலில் முன்னிருத்த வேண்டும்.வரப்போகும் சட்டசபை தேர்தலில், புதிய வரவாக வரப்போகும் மனிதர், அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் ஊழலின் நிழல்படாத வெளிப்படை தன்மை கொண்ட ஒரு அற்புதமான ஆட்சியை தருவார் என, நம்பலாம்.இரு திராவிட கட்சிகளிடமிருந்தும், தமிழகத்தை, புதிய மனிதர் மீட்டெடுத்தால், தமிழகம் விடுபடும்; அது, நடிகர் ரஜினியா கூட இருக்கலாம்.

காளிமுத்து அன்றேசொன்னது, இன்றுபலித்து விட்டதே

டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: அன்று, முதல்வராகஎம்.ஜி.ஆர்., ஆண்ட போது, கூட்டணியில் இருந்த காங்கிரசின் முக்கிய தலைவர்களில் சிலர் மட்டும், அவரது ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை கூறி வந்தனர்.
இது போன்ற, காங்கிரசின் வாய் கொழுப்பு தலைவர்களின் வாயை அடக்க நினைக்கும் போதெல்லாம், எம்.ஜி.ஆர்., தன் அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த, கா.காளிமுத்துவை தான் பதிலடி கொடுக்கஅழைப்பார்.அப்படி ஒருமுறை அழைக்கும் போது, 'உங்க, 'ஸ்டைலில்' காங்கிரஸ் தலைவர்களை, 'செல்லமாக' லேசாக தட்டுங்கள்' என்றார்,எம்.ஜி.ஆர்.,ஆனால், காளிமுத்துவோ பலமாக தட்டி விட்டார். அப்போது நடந்த, அ.தி.மு.க., பொதுக்கூட்டம் ஒன்றில், அவர், 'கருவாடு மீன் ஆகாது. கறந்த பால் மடி புகாது. கானல்நீர் நீராகாது. அது போல, இனி எந்த காலத்திலும், தமிழகத்தில், காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது'என்றார்.காளிமுத்துவின் பேச்சுக்கு, காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டன குரல் எழுந்தது. 'கூட்டணியில் இருந்தபடி, அமைச்சர் காளிமுத்து இப்படி பேசலாமா' என்றனர்,காங்கிரசார்.அதற்கு, எம்.ஜி.ஆர்., 'இது, காளிமுத்துவின் சொந்த கருத்து;அ.தி.மு.க., கருத்தல்ல. 'அவர் கருத்துக்கும், அ.தி.மு.க.,விற்கும், எந்த சம்பந்தமும் இல்லை' எனக்கூறி, அந்தப்பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். இதுபோன்ற பிரச்னைகளை, இப்படி தந்தரம் வாயிலாக, எம்.ஜி.ஆர்., கையாள்வார்.தமிழகத்திற்கு மட்டும் தான், காளிமுத்து சொன்னார். ஆனால், அவர் சொன்னது, இன்று, இந்தியாவுக்கே பொருத்தமாகி விட்டது.மத்தியில் நடைபெற்ற லோக்சபா பொதுத்தேர்தலில், காங்கிரஸ் இரண்டாவது முறையாக தொடர்ந்து தோல்வி அடைந்து, ஆட்சியை இழந்தது. தலைநகர், டில்லியில் நடைபெற்ற, சட்டசபை தேர்தலிலும், வரலாறு காணாத அளவுக்கு, இரண்டு முறையும்,பூஜ்ஜியம் ஆகிவிட்டதே.
டிவி' சீரியல்களைகுடும்பத்தோடுபார்க்க முடிவதில்லை
கே.எஸ்.வி.சாமா, சென்னையிலிருந்து எழுதுகிறார்: சாமியார்கள் எல்லாம் நித்யானந்தா போன்றோர் அல்ல; ஜோதிடர்எல்லாம், பணம்தின்னும் கழுகுகளும் அல்ல.ஜோதிடம், பெரிய ஆழ்கடல் போன்றது. ஆழ்கடலில் மூழ்கிய ஒரு சிலரால் தான், முத்தெடுக்க முடியும். ஓரளவுக்கு ஜோதிடம் தெரிந்தோரை, தெரியாதோர் எனக் கூறி விட முடியாது.
ஜோதிடர்களுக்கு, தெய்வ நம்பிக்கை இருக்கும். கடவுள் என்றால் பயமும், மனசாட்சியும் இருக்கும். ஜோதிடர் எல்லாம் தெரிந்தோர் என, சொல்ல முடியாவிட்டாலும், அவர்கள் தெரிந்த வரை, ஜாதகத்தில் நிறை, குறைகளை தான்சொல்வர்.ஜோதிடம், காலக் கண்ணாடி போன்றது; 'மாயா ஜால' கதைகளில் வரும் மந்திர கண்ணாடி அல்ல. சரியான விதத்தில், சரியான ஜோதிடரை அணுகி, ஜாதகத்தில் உள்ள நல்லது, கெட்டதுகளை தெரிந்து கொள்ள முடியும்.அதன்படி நடந்து கொண்டால், மனிதர்கள் தெளிவடைந்து வாழ்க்கையில், உழைப்பாலும், அறிவாலும், முன்னுக்கு வரலாம்.அவற்றிற்கு, புத்தி தெளிவாக இருக்க வேண்டும். நன்மை, தீமைகளை ஆராய்ந்து பார்த்து, அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.சினிமாவிலும், 'டிவி' சீரியல்களிலும், சாமியார்களை மிகவும் மோசமாக சித்தரிக்கின்றனர்.சாமியார்களும், ஜோதிடர்களும் ஏமாற்று பேர் வழிகள்; எத்தர்கள்; பணத்திற்காக என்னவெல்லாமோ செய்வோர் போல் காட்டுகின்றனர். நாட்டில், சாமியார்களில், ஞானம் உள்ளோரும் இருக்கின்றனர்.சினிமாக்காரர்களும், 'டிவி' தொடரை இயக்குவோரும், பணம் சம்பாதிப்பதே தொழில் என எண்ணாமல், முடிந்தளவிற்கு தரமான தயாரிப்புகளை தர வேண்டும்.'டிவி' தொடர்களுக்கும் 'சென்சார்' போர்டு வர வேண்டும். அப்போது தான் தயாரிப்பாளர்கள், கதாசிரியர்கள் திருந்துவர்.சினிமாவை போன்று, 'டிவி' நாடகங்களையும் குடும்பத்தோடு இனி உட்கார்ந்து பார்க்க முடியாது; அவ்வளவு ஆபாசமாகவும், கொடூரமாகவும் இருக்கிறதே

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement