Advertisement

வெறித்தனமான விசுவாசம்

'என் கட்சிக்காரர்கள், இந்த அளவுக்கா என் மீது பாசமாக இருக்கின்றனர்' என, ஆச்சரியத்திலும், தீவிர யோசனையிலும் ஆழ்ந்துள்ளார், தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேக ராவ்.இவரது, 66வது பிறந்த நாளை, கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சமீபத்தில், பிரமாண்டமாக கொண்டாடினர்.
தலைநகர் ஐதராபாதில், கொண்டாட்டங்கள் களை கட்டின.சந்திரசேகர ராவின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், ஆங்காங்கே, முதல்வரின் பிரமாண்ட படத்துடன், தங்கள் படத்தையும் அச்சிட்டு, பேனர்களை வைத்திருந்தனர்.இவர்களை எல்லாம் மிஞ்சி விட்டார், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தீவிர தொண்டரான ரமேஷ். இவர், ஐதராபாதில், முடி திருத்தும் கடை வைத்துள்ளார்.சந்திரசேகர ராவின் பிறந்த நாளன்று, கட்சியின் தலைமை அலுவலகம் அருகே, ஒரு நாற்காலியை போட்டு, தற்காலிகமான முடி திருத்தும் கடையை அமைத்திருந்தார்.அன்று முழுவதும், ஏழைகளுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்தார். இந்த தகவல், சந்திரசேகர ராவுக்கு எட்டியதும், ரமேஷை அழைத்து பாராட்டியதுடன், 'உனக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது' என்றும் ஆசிர்வாதித்தார்.'விசுவாசத்தை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்; ஆனால், வெறித்தனமான விசுவாசத்தை இப்போது தான் நேரில் பார்க்கிறேன்' என, நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் சந்திரசேகர ராவ்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement