Advertisement

'டவுட்' தனபாலு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: காவிரி டெல்டாவில், கடலுார், நாகப்பட்டினம் மாவட்டங்களில், 60 ஆயிரம் ஏக்கரில், பெட்ரோலிய மண்டல திட்டங்கள் செயல்படுத்தப்பட இருந்தன. வேளாண் மண்டலமாக மாற்றப்பட்டுள்ளதால், அந்த திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதை வரவேற்கிறேன். இதற்காகத் தான், தொடர்ந்து நாங்கள் போராடி வந்தோம்.'டவுட்' தனபாலு: டெல்டா மாவட்டங்களுக்கு, குறிப்பாக கடைகோடி மாவட்டங்களுக்கு காவிரி நீர், எந்த ஆண்டும் சரியாக சென்றதில்லை. மேலும், நெல்லுக்கு போதிய விலை இருப்பதில்லை என்பதால், ஏராளமானோர் விவசாயத்தை புறக்கணித்துள்ளனர். இந்நிலையில், அந்த பகுதியில், 92 ஆயிரம் கோடி ரூபாய் பெட்ரோலிய திட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படுமோ என்ற, 'டவுட்' இப்போது, அந்த பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக வரும் செய்திகளை அறிவீரா?
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: மத்திய அரசின், குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு போன்றவை, முஸ்லிம்களுக்கு மட்டும் ஆபத்தானவை அல்ல; நாட்டின் அனைத்து மக்களுக்கும் எதிரானது. நீங்கள் எத்தனை வகை ஆவணங்களை வைத்திருந்தாலும், இந்தியர் என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும். 'டவுட்' தனபாலு: அடிமட்டத்திலிருக்கும் மக்களை துாக்கம், சோம்பல், கல்வியறிவின்மை போன்றவற்றிலிருந்து தட்டி எழுப்பி, முன்னேற்றுவீர்கள் என்ற எண்ணத்தில் உங்களை நம்பும் கட்சியினரை, இப்படி தவறாக வழிநடத்தலாமா? இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு, இந்த மூன்று விவகாரத்திலும் எந்த பாதிப்பும் இல்லை. இத்தனை நாட்களும், 'முஸ்லிம்களுக்கு எதிரானது' என கூறி வந்தீர்கள்; இப்போது, ஹிந்துக்களையும் சேர்த்துக் கொள்வது, எதிர்ப்பு கூட்டத்தை அதிகமாக சேர்க்க வேண்டும் என்பதற்காகத் தான் என்பது, 'டவுட்' இல்லாமல் அனைவருக்கும் புரிகிறது.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் பிற இரு விவகாரங்களில், மத்திய அரசுக்கு ஒத்துழைப்பதன் மூலம், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி நிறைவேற்ற, அ.தி.மு.க., துணை நிற்கிறது. எனவே, சிறுபான்மையினர் நலனில் அக்கறை இருப்பது போல, நீலிக்கண்ணீர் வடிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 'டவுட்' தனபாலு: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றும், எல்லா நாட்டிலும் உள்ளது; இந்தியாவிற்கும் அவசிய தேவை என்பதை நன்கு உணர்ந்தும், எதிர்க்கிறீர்கள். அதனால், முஸ்லிம்களில் நடுநிலையாளர்கள் ஓட்டும், ஹிந்துக்களின் ஓட்டுகளும் உங்கள் கட்சிக்கு கிடைக்காமல் போய் விடும் என்ற பீதியில், சுருதியை குறைத்துக் கொண்டுள்ளீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • pathirikai - KAILASH,இந்தியா

    அப்படியே அந்த தைலா தோட்டம் நாற்பது ஆயிரம் கோடி போராடி உழைத்து சம்பாதித்தது எப்படி என பொதுமக்களுக்கு சொல்லி கொடுத்தல் நலம்

  • Krish - Chennai ,இந்தியா

    குடிமகன் இல்லை என்றால் எந்த நாட்டிற்கு அனுப்புவார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement