Advertisement

சிறுவனை அடித்து வழிப்பறி

காரியாபட்டி:மதுரையை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் ஹரீஷ்குமார். 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
காரியாபட்டி வெற்றிலைமுருகன்பட்டி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்த ஹரிஷ்குமார் பஸ் இல்லாததால் முக்கு ரோட்டிலிருந்து நடந்து சென்றார். டூவீலரில் வந்த ஒருவர் எங்கு செல்கிறாய் நான் இறக்கி விடுகிறேன் என கூறி டூவீலரில் ஏற்றி சென்றார். இறக்கி விட வேண்டிய இடத்தில் இறக்கி விடாமல் ஆத்திகுளம் ரோட்டில் உள்ள முட்புதருக்குள் அழைத்து சென்று சரமாரியாக தாக்கி அலைபேசி, ரூ 100ஐ பறித்து சென்றார். காரியாபட்டி பகுதியில் வழிப்பறி கும்பல்கள் நடமாட்டம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement