Advertisement

கடலூரில் இருந்து ஒரு காதல் கதை

கடலுார் மாவட்டம் திருவதிகையைச் சேர்ந்த ஆனந்தன்(30) ஒரு சிற்ப வேலை செய்யும் கூலி தொழிலாளி
இவர் தன் தொழில் நிமித்தமாக இதே மாவட்டத்தை சேர்ந்த திருவந்திபுரம் என்ற இடத்தில் உள்ள கோவிலுக்கு வேலைக்கு சென்று இருக்கிறார்
வேலைக்கு சென்ற இடத்தில் கோவிலுக்கு எதிரே சூர்யா(21) என்பவர் இருந்திருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்ட முதல் பார்வையிலேயே காதல் அரும்பியிருக்கிறது.
பிறகு தாகத்திற்கு தண்ணீர் கேட்பது சிற்பவேலைகளுக்கு தேவையான உதவிகள் கேட்பது என்று காதல் வளர்ந்திருக்கிறது.
பொருளாதாரத்தில் சூர்யா கொஞ்சம் வசதியானவர் அவரது தந்தையும் செல்வாக்கு நிறைந்தவர் இதை எல்லாம் காதல் பார்ப்பது இல்லையே.
ஒரு கட்டத்தில் சூர்யாவின் வீட்டாருக்கு இவர்களது காதல் தெரியவர கடுமையான எதிர்ப்பையும் கட்டுப்பாட்டையும் விதித்தனர்.
கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து வெளியேறிய சூரியாவை ஒலையூர் பெருமாள் கோயிலில் வைத்து ஆனந்தன் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடித்த கையோடு கடலுார் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து எந்த நேரமும் எங்களுக்கு ஆபத்து வரலாம் தயவு செய்து நாங்கள் வாழ பாதுகாப்பு கொடுங்கள் என்று கேட்டு மனு கொடுத்துள்ளனர்.
காசு பணம் கல்வி பதவி பாராமல் வந்த இந்த எளிமையான காதல் வாழ்க என்று அட்வான்சாக காதலர் தின வாழ்த்தையும் சேர்த்து வாழ்த்திய போலீசார் நாங்க இருக்கிறோம் பார்த்துக் கொள்கிறோம் என்று ஆறுதல் சொல்லி அன்பாக வழியனுப்பிவைத்துள்ளனர்.
எல்.முருகராஜ்.

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • narayanan iyer - chennai,இந்தியா

    பெற்றோர்களின் மனத்தை புண்படுத்தி இப்படி ஒரு வாழ்க்கை தேவையா? அவர்களை சம்மதிக்க வைத்து மணம் செய்து சந்தோஷமாக இருந்திருக்கலாம் . போலீசும் இருசாராரையும் வரவழைத்து சமாதானம் செய்வதை விடுத்து நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்ற அவர்களது பதவியை பிரபலப்படுத்தி உள்ளனர் .

  • Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா

    வாழ்த்துக்கள் .....

    • குறையொன்றுமில்லை - குன்றக்குடி,இந்தியா

      நல்லவன் சார் சூப்பர் ( இப்படி போட்டா கருத்து வெளியாகுதான்னு பாக்கத்துக்கு)

  • naadodi - Plano,யூ.எஸ்.ஏ

    இந்த அன்பும் பிரியமும் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    நல்லபடியா இருங்க..

  • Kandaswamy - Coimbatore,இந்தியா

    சிற்பி, மாம்பழ ஏரியாவுல நல்லா செதுக்கி இருக்கார். உடம்பை பார்த்துக்கோங்க பாராட்டுக்கள்

  • ramakrishnan balasubramanian - Chennai,இந்தியா

    . அப்படி என்ன எழுதுகிறோம்.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    புதுமண மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    வாழ்த்துக்கள் சிற்பியாரே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement