Load Image
Advertisement

குடியரசு தினவிழா கொண்டாட்டத்திற்கு தயாராவோம்...


நாடு 71வது குடியரசு தினவிழா கொண்டாட்டத்திற்கு தயராகிக்கொண்டு இருக்கிறது.

கிட்டத்தட்ட அனைத்து மாநில தலைநகரங்களிலும் ஒத்திகை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. ஒத்திகை காட்சிகளை பார்க்கும் போதே நிஜத்தில் பார்த்ததே தீரவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்ப்படுத்துகிறது.குறிப்பாக பள்ளி,கல்லுாரி மாணவியர் நமது நாட்டின் மூவர்ணக்கொடியை ஏந்தியபடி வழங்கவிருக்கும் நடனகாட்சிகள் நிச்சயம் பலரது கவனத்தையும் ஈர்க்கும்.


தலைநகர் டில்லியைப்பற்றி கேட்கவேண்டாம், அனைவரது கண்களும் டில்லியை நோக்கியே இருக்கிறது. நமது நாட்டின் பெருமைக்குரிய கலாச்சார நடனங்கள்,பண்பாட்டின் சின்னங்கள் கொண்ட வாகனங்கள் அணிவகுத்துவந்து மக்களை மகிழ்விக்கும்.தமிழகத்தில் இருந்து ஐயனார் வடிவம் கொண்ட வாகனம் அணிவகுத்து வர இருக்கிறது இந்த வாகனத்தில் கரகாட்டக்கலைஞர்கள் இடம் பெற்று தங்கள் திறமையை வெளிப்படுத்த இருக்கின்றனர்.முப்படைகளின் அணிவகுப்பும் சிறப்பு பீரங்கிகளும் அணிவகுத்து வருவது கண்கொள்ளாக்காட்சியாகும்.

முடிந்த அளவு உங்கள் ஊரில் நடக்கும் குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் குடும்பத்தோடு கலந்து கொள்ளுங்கள் நாட்டுப்பற்றை தவறாமல் குழந்தைகளிடம் விதையுங்கள் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்.-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement