Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்: ஈ.வெ.ரா., பற்றி நடிகர் ரஜினி கூறியது கண்டனத்திற்குரியது. எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து, கொள்கை, லட்சியங்களை வகுத்துக் கொடுத்தவர், ஈ.வெ.ரா., அத்தகைய தலைவரை யாரும் சிறுமைப்படுத்த, நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.'டவுட்' தனபாலு: அ.தி.மு.க.,வுக்கும், அக்கட்சியினருக்கும் வழிகாட்டியாக இருந்தது, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா தான். அவர்கள் இருவரும் தான், அக்கட்சியின் வழிகாட்டிகள். அவர்கள் எப்போதாவது, 'ஈ.வெ.ரா., கொள்கைகளை பின்பற்றுகிறோம்' என, சொல்லி, ஹிந்து கடவுள்களை அவமதித்தது உண்டா. அந்த தலைவர்கள் இப்போது இல்லை என்பதற்காக, நீங்கள், ஈ.வெ.ரா.,வுக்கு முட்டு கொடுக்கிறீர்களோ என்ற, 'டவுட்' ஏற்பட்டுள்ளது
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேட்டி: ஈ.வெ.ரா., தலைமையில், 1971ல், சேலத்தில் நடந்த ஊர்வலத்தில், ராமர், சீதையை இழிவுபடுத்தியதாக, சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். அது தவறு. திராவிடர் கழகத்தை சேர்ந்த அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்; ரஜினி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.'டவுட்' தனபாலு: ரஜினி ஒரு வார்த்தை சொல்லியதற்கே, உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது; கோர்ட்டுக்கு போகிறீர்கள். ஆனால், காலம் காலமாக, ஹிந்து கடவுள்களை மோசமாக சித்தரித்து, அரசியல் மற்றும் நிதி லாபம் அடையும் உங்கள் அமைப்பினர் மீது எத்தனை வழக்குகள் போட முடியும்... எனவே, இனிமேலும் உங்களின், 'சரக்கு' தமிழகத்தில் செல்லாது என்பது, உங்களின் பயந்தாங்கொள்ளி பதில் மூலம், 'டவுட்' இல்லாமல் தெளிவாகிறது.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் தேவநாதன்: கருப்புச் சட்டையும், கசப்பை விதைக்கும் கருத்துகளும் இனிமேலும் எடுபடாது. மன்னிப்பு கேட்க மறுத்த ரஜினிக்கு பாராட்டுகள். மன்னிப்பு கேட்க வேண்டியது அவரல்ல; கோடானு கோடி ஹிந்துக்கள் மனதை புண்படுத்திய திராவிடர் கழகத்தினர் தான்.'டவுட்' தனபாலு: நடிகர் ரஜினி இன்னும் அரசியல் கட்சி துவக்கவில்லை. அவரின் நான்கு வார்த்தைகளுக்கே,தமிழகத்தில் பெரும் அரசியல் பிரளயம் ஏற்படுகிறது. அவரே, முழு நேரமாக அரசியலில் குதித்தால், போர்வையாளர்களை தோலுரித்து தொங்க விட்டு விடுவாரோ என்ற, 'டவுட்' அவர்களுக்கு இப்போது வந்துள்ளது. அதனால் தான் அந்த வியாபாரிகள், குய்யோ முய்யோ என, கூச்சலிடுகின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • srinivasan - NAVI MUMBAI,இந்தியா

  மிகவும் அழகாக சொல்லப்பட்டது. தினம் தினம் ஏதாவது ஒரு வியாபாரி, ஹிந்து மக்களை கொச்சைப்படுத்துவதும், தெய்வங்களை நிந்திப்பதும், ஜாதி சொல்லி கிண்டல் அடிப்பதுமாக இருக்கிறார்கள். உடல் ரீதியாக மனா ரீதியாக இவர்களை காயப்படுத்தும் வேலை தினம் தினம் நடக்கிறது. எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கோர்ட்டுக்கும் போனார்களா. இப்பொழுது ரஜினிக்கு எதிராக பேசுபவர்களும், நாத்திக கும்பலுக்கு எதிராக பேசுபவர்களும் அப்போது பேசாதது என்?

 • Ganesh G - Hyderabad,இந்தியா

  அ.தி.மு.க. வின் கொள்கை கடவுள் மறுப்பு கொள்கை கிடையாது. நல்ல நேரம் பார்த்து தான் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். நல்ல நேரம் பார்த்து தான் பதவி ஏற்றுக்கொள்வார்கள். இவற்றையெல்லாம் பெரியார் முற்றிலுமாக மறுப்பவர். அப்படி இருக்க ஜெயக்குமார் காமெடி பண்ணுகிறார். அவருக்கு ரஜினியை எதிர்க்கணும். அவ்வளவு தான்.

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  \\எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து, கொள்கை, லட்சியங்களை வகுத்துக் கொடுத்தவர்,...\\ அவரது கொள்கை என்ன? கடவுள் மறுப்பு ...... நீங்கள் செய்தது/செய்வது என்ன? கடவுள் வழிபாடு........ அப்போ நீங்கள் அவரது கொள்கைகளை பின்பற்றுகிறீர்களா இல்லையா ? அதுக்கு பதில் சொல்லுங்க தலைவரே ?? .... உங்களுக்கு நினைவாற்றல் குறைந்திருக்கக் கூடும் என்பதால், ஒரு சிறிய செய்தி (நீங்களே போட்டது) "Tamil Nadu: AIADMK organised a 'yagna' at Arulmigu Gangadeeswarar temple in Purasawalkam, Chennai praying for rain. State Minister D. Jayakumar, says, "A drought like situation is prevailing, in this context, we went to the almighty & performed special prayers for rain." ..............

 • Aaaaa - Bbbbbb,இந்தியா

  இப்படியே எல்லோரும் ரஜினியை உசுப்பிவிட்டுக்கொண்டே இருங்கள்.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  அந்த வேண்டத்தகாத நிகழ்ச்சிகள் நடந்தபோது மனம் நொந்து குமுறிய பலர் இன்னும் இருப்பார்கள் அன்று அவர்கள் சொல்ல முன்வராததை இன்று ரஜனி சொல்லிவிட்டார் பெரியார் கொள்கைகள் ஏற்காது மூகாம்பிகை முதல் எல்லாக் கோயிலுக்கும் சென்ற எம் ஜி ஆரும், ஸ்ரீரங்கம் பெருமாளையும் மற்ற எல்லாக் கோயில்களையும் தரிசித்த உங்கள் அம்மாவும் அப்போதே பெரியார் வழியில் இருந்து வெகு தூரம் போய் விட்டனர் இப்போது உங்களுக்கு Intha ‘பெரியார் ஆதரவு’ பொருந்துந்தாத வேஷம் அமைச்சரே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement