Advertisement

மல்லர்கம்பம்

nsimg2459189nsimgசென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்த மைலாப்பூர் திருவிழாவில் பார்வையாளர்ளை அதிகம் கவர்ந்தது மல்லர்கம்பம் எனும் தமிழர் வீரவிளையாட்டுதான்.
nsmimg746112nsmimgஉயரமான கம்பத்தில் ஆண்கள் செய்த விளையாட்டும் பார்ப்பவர்களை ஆச்சர்யத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.
nsmimg746113nsmimgமொபைல் போனில் பேசி மொபைல் போனில் விளையாடி மொபைல் போனிலேயே வாழும் இன்றைய தலைமுறையினர் இழந்துவருவது நல்ல பொழுதுகளையும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் மட்டுமல்ல நல்ல உடற்கட்டையும்தான்.
nsmimg746114nsmimgநல்ல திடகாத்திரமான உடற்கட்டுடன் கூடிய குழந்தைகளை சிறுவர்களை பார்ப்பதே அரிது என்றாகிவிட்ட காலத்தில் இந்த மல்லர் கம்பத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் சிறந்த உடற்கட்டும் வலுவும் கொண்டிருந்தனர். nsmimg746115nsmimg
நிமிட நேரங்களில் கயிற்றில் ஏறுவதும் கம்புகளில் சாகசம் செய்வதுமாக அவர்கள் பம்பரமாக மாறி மாறி களைப்பின்றி மல்லர் கம்பத்தில் விளையாடி பலரையும் மகிழ்வித்தனர்.இது பற்றி இதன் பயிற்சியாளர் பிரகாஷ் என்பவர் கூறுகையில்...
nsmimg746116nsmimgபழங்காலத்தில் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு மல்லர் கம்பப்பயிற்சி வழங்கப்பட்டது. தமிழகத்தில் மல்யுத்த வீரர்கள் யாராக இருந்தாலும் மல்லர் கம்பம் பயிற்சிக்கு பிறகே மல்யுத்தம் செய்வர் காரணம் அப்படியொரு உறுதியான உடலையும் மனதையும் இந்த பயிற்சி கொடுக்கும்.
nsmimg746117nsmimgஇது பயிற்சி என்ற நிலையில் இருந்து தற்போது விளையாட்டு என்ற அந்தஸ்து பெற்று இந்தியா முழுவதும் பரவியுள்ளது.இந்த விளையாட்டின் மீதான ஈடுபாடு காரணமாக நான் விழுப்புரம் உலகதுரையிடம் கற்றுக் கொண்டேன் நான் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்கும் கற்றுத்தர எண்ணினேன்.
nsmimg746118nsmimgநான் சென்னை ஐசிஎப்பில் காவலராக உள்ளேன் எனக்கு அதிகாரிகள் தந்த ஆதரவு காரணமாக இலவசமாக அனைவருக்கும் கற்றுத்தந்து வருகிறேன்.
தமிழக மல்லர் கம்பம் என்ற இந்த அமைப்பில் ஆண் மற்றும் பெண்களுக்கு மல்லர் கம்பம் பயிற்சி வழங்கப்படுகிறது பெண்களுக்கு எனது மனைவியும் என்னுடன் பணிபுரிபவருமான பாமாபிரகாஷ் பயிற்சி தருகிறார்.எங்கள் அணி இதுவரை ஆறு தேசிய விருதினைப் பெற்றுள்ளது.
ஆரோக்கியமான அருமையான உடலைப் பெற எந்த வயதினரும் இந்தப் மல்லர் கம்பம் பயிற்சியில் ஈடுபடலாம் பயிற்சியில் ஈடுபட விரும்புபவர் தொடர்புகொள்ள வேண்டிய எண்:9942448468.
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement